உலகப் பிரச்சனையாக மாறிய ஜல்லிக்கட்டு : உலகம் முழுவதும் வாழும் தமிழா்கள் பாேராட்டத்தில் குதிப்பு!

Asianet News Tamil  
Published : Jan 19, 2017, 09:15 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
உலகப் பிரச்சனையாக மாறிய ஜல்லிக்கட்டு : உலகம் முழுவதும் வாழும் தமிழா்கள் பாேராட்டத்தில் குதிப்பு!

சுருக்கம்

உலகப் பிரச்சனையாக மாறிய ஜல்லிக்கட்டு : உலகம் முழுவதும் வாழும் தமிழா்கள் பாேராட்டத்தில் குதிப்பு!

உலகம் முழுவதும் உள்ள தமிழா்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாேராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இப்பிரச்சனை உலக நாடுகளின் கவனத்தை ஈா்த்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

சமூக ஊடகங்கள் மூலம் தமிழக இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு அளிக்கும்படி உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களை கேட்டுக் கொண்டதால் இந்த போராட்டம் தற்போது மற்ற நாடுகளுக்கும் பரவி உள்ளது.  

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ரஷியா, சீனா, கனடா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தமிழ் சங்கங்கள் அங்குள்ள மக்களிடம் ஜல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன.

‘ஜல்லிக்கட்டை காப்போம்’, ‘எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும்’ என்ற பதாகைகளையும் அவர்கள் ஏந்தி இருந்தனர். பீட்டா அமைப்பை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

அமொிக்காவின் சான்பிரான்சிஸ்கோ உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த போராட்டங்கள் ஒவ்வொன்றிலும் 250 முதல் 500-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில் முன்பாக நேற்று மாலை திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். முக்கிய நாடுகள் பலவற்றில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக இப்பிரச்சினை தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

மனைவி உயிரைக் காப்பாற்றிய 50 டன் கிழங்கு தானம்! சீனாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
டிரம்ப் தான் ரியல் ஹீரோ.. என் நோபல் பரிசு அவருக்குதான்.. ஐஸ் வைக்கும் வெனிசுலா மச்சாடோ!