Italy PM Girogia Meloni : தன்னை பற்றிய டீப் ஃபேக் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானதை அடுத்து, 10,00,000 யூரோ நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார் இத்தாலி நாடு பிரதமர்.
இத்தாலிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி 100,000 யூரோக்கள் ($109,345) நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இரண்டு நபர்கள் மெலோனியின் முகத்தை மற்றொரு நபரின் உடலில் டிஜிட்டல் முறையில் இணைந்து, அதன் மூலம் வீடியோக்களை உருவாக்கி, பின்னர் அவற்றை இணையத்தில் பரப்பியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
40 வயது நபர் மற்றும் அவரது 73 வயது தந்தை மீது அவதூறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ய பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போனை கண்காணித்து குற்றவாளிகளை சட்ட அமலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
undefined
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு போனில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!
இத்தாலியில் சில அவதூறு வழக்குகளுக்கு, குற்றவியல் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் விதிக்கப்படலாம். அது குற்றவாளிகளுக்கு சிறைவாசம் வழங்க வழிவகுக்கும். மேலும் வரும் ஜூலை 2 ஆம் தேதி இந்த வழக்கில் நீதிமன்றத்தில் மெலோனி சாட்சியம் அளிக்க உள்ளார். அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு ஆபாச இணையதளத்தில் வீடியோக்கள் வெளியிடப்பட்டு பல மாதங்களில் "மில்லியன் பார்வைகளை" பெற்றதாக குற்றப்பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த வழக்கு மூலம் பெரும் பணத்தை "ஆண்களின் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு" உதவுவதற்காக திருமதி மெலோனி முழுத் தொகையையும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெலோனியின் வழக்கறிஞர் Maria Giulia Marongiu, இழப்பீடு கோருவது, இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்காமல் ஊக்குவிக்க உதவும் என்று வலியுறுத்தினார்.
மெலோனியின் வழக்கறிஞர் Maria Giulia Marongiu, இழப்பீடு கோருவது, இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்காமல் ஊக்குவிக்க உதவும் என்று வலியுறுத்தியுள்ளார். டீப்ஃபேக் தொழில்நுட்பமானது செயற்கை நுண்ணறிவு மூலம் செயற்கை ஊடகத்தை உருவாக்குவதை உள்ளடக்குகிறது.
எம்ஐடியின் கூற்றுப்படி, "டீப்ஃபேக்" என்ற அந்த சொல் கடனாக 2017ன் பிற்பகுதியில் உருவானது, "டீப்ஃபேக்" என்ற ரெடிட் பயனர் முகத்தை மாற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஆபாச வீடியோக்களைப் பகிர்வதற்கான தளத்தை உருவாக்கினார். டீப்ஃபேக் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி புனையப்பட்ட நிகழ்வுகளை நம்ப வைக்கும் வகையில் படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்குகிறது.
இந்த செயல்முறை AIன் வடிவத்தை சார்ந்துள்ளது, இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்திராத ஒரு நிகழ்வை உருவாகும் திறன்கொண்டது அது. செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்களுக்கு நாம் மகிழ்ச்சியடைந்தாலும், இது போன்ற டீப்ஃபேக்குகள் வேரோடு அழிக்க வேண்டும் என்றும் பலரும் கூறிவருகின்றனர். இந்திய அளவில் பல நடிகைகளின் Deep Fake வீடியோகள் இணையத்தில் பரப்பப்பட்டது.
பொதுமக்களின் நம்பிக்கைக்கும், உண்மைக்கும் குறிப்பிடத்தக்க வகையில் இந்த Deep Fake அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. டீப்ஃபேக்குகள் தவறான தகவல்களைப் பரப்புவதற்கும், பொதுக் கருத்தைக் கையாளுவதற்கும், நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்கும், ஒரு தனி நபர்களின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை உருவாக்குவதன் மூலம் அல்லது அவர்கள் உண்மையில் பேசாத அறிக்கைகளை வெளியிடுவதற்கும் சக்திவாய்ந்த கருவிகளாகச் செயல்படுகின்றன.
2024-ன் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் இவைதான்.. இந்தியா பட்டியலில் இடம்பெற்றுள்ளதா.?