இந்தியர்களின் அறிவு கூர்மையின் அடையாளமாக திகழ்பவர் ‘ராமானுஜன்’…இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு புகழாரம்

First Published Jul 5, 2017, 9:42 PM IST
Highlights
Isreal PM speak about ramanujan

இந்தியர்களின் அறிவு கூர்மையின் அடையாளமாக திகழ்பவர் ‘ராமானுஜன்’…இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு புகழாரம்


இந்திய மக்களின் அறிவுத்திறமையின் அடையாளமாக கணித மேதையான நிவாச ராமானுஜன் திகழ்கிறார். இரு நாடுகளும் அறிவுசார்ந்த விஷயங்களில் ஒத்துழைப்பு செயல்படும் என நம்புகிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுபுகழாரம் சூட்டனார். 

பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் அரசு முறைப்பயணமாக இஸ்ரேல் நாட்டுக்க முதல் முறையாக நேற்று முன்தினம் சென்றார். தலைநகர் டெல் அவைவ் நகரில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அளிக்கப்பட்ட ராணுவ மரியாதையையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். 

அதன்பின் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு நேற்று தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு விருந்து அளித்தார். அதன்பின், இருவரும் இணைந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர்நெதன்யாஹு கூறியதாவது-

இந்திய மக்கள் மீது நாங்கள் மிகப்பெரிய மரியாதையும், அன்பும் வைத்து இருக்கிறோம். இஸ்ரேல் தொழில்நுட்ப கல்லூரியில் எனது மாமா கணிதவியல் துறையில் பேராசிரியராக இருந்தார் என நான் உங்களிடம்(பிரதமர் மோடியிடம்) கூறியிருக்கிறேன். அவர் என்னிடம் பல முறை, இந்திய கணிதவியல் மேதைராமானுஜன் குறித்து மிகப்பெருமையாக பேசியுள்ளார். அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளார்.

நூற்றாண்டுகள் பல ஆனாலும், ராமானுஜன்தான் மிகப்பெரிய கணிதமேதை. இந்திய மக்களின் அறிவுக்கூர்மையின் அடையாளமாக ராமானுஜன் திகழ்கிறார். எங்கள் நாட்டு மக்களும் அறிவார்ந்தவர்கள்தான். அதனால், இந்தியாவுடனான அறிவுசார்விஷயங்களில கூட்டுறவை நம்புகிறோம்.

இரு நாட்டு மக்களின் சிறப்பான எதிர்காலத்தைத்தான் நாங்கள் கேட்கிறோம். இது சாதாரண வேலை இல்லை. ஒரு நாள் இரவில் இது நடக்காது. ஆனால், நானும், பிரதமர் மோடியும் இது நடக்க வேண்டும் என கேட்கிறோம். இவ்வாறு அவர் ெதரிவித்தார்

click me!