உங்க நாட்டுல இப்படி நடந்தா சும்மா இருப்பீங்களா? ரஷ்யா, சீனாவை எகிறி அடிக்கும் ஐ.நா. தூதர்

By SG Balan  |  First Published Oct 26, 2023, 12:36 PM IST

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் புதன்கிழமை தோல்வி அடையச் செய்ததன.


ரஷ்யாவும் சீனாவும் இப்படிப்பட்ட படுகொலைகளைச் சந்தித்திருந்தால் இஸ்ரேலை விட அதிக சக்தியுடன் செயல்படும் என்று இஸ்ரேலின் ஐ.நா. தூதர் கிலாட் எர்டான் கூறியுள்ளார். ஹமாஸ் தாக்குதல் மீதான அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்து இரு நாடுகளும் வாக்களித்ததை அடுத்து இந்த விமர்சனம் வந்திருக்கிறது.

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல்களைக் கண்டித்து அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட ஐ.நா. தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் இரண்டாவது முறையாகத் தோற்கடித்துள்ளன. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் விமர்சித்துப் பேசியுள்ள இஸ்ரேலிய தூதர் கிலாட் எர்டான், இதேபோன்ற படுகொலையை அவர்களும் அனுபவித்திருந்தால், இன்னும் வலுவாக பதிலடி கொடுத்திருப்பார்கள் என்று சாடியுள்ளார்.

Latest Videos

undefined

"இஸ்ரேலில், நாங்கள் உயிர்வாழ்வதற்காகப் போராடுகிறோம்... உங்கள் நாடுகளில் இதேபோன்ற படுகொலைகள் ஏதேனும் நடந்திருந்தால், நீங்கள் இஸ்ரேலை விட அதிக சக்தியுடன் செயல்படுவீர்கள் என்று நான் உறுதியாகச் சொல்வேன்" எனக் கிலாட் எர்டான் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் சுற்றுலா மாநாடு: புதுச்சேரி அரங்கைத் திறந்து வைத்தார் அமைச்சர் லட்சுமிநாராயணன்

"இத்தகைய காட்டுமிராண்டித்தனமான மனிதாபிமானமற்ற படுகொலை அட்டூழியங்களைச் செய்த பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒரு பரந்த ராணுவ நடவடிக்கை தேவை என்பதில் எந்தக் கேள்வியும் இருக்காது. இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதற்காக அவர்களை ஒழிக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் புதன்கிழமை தோல்வி அடையச் செய்ததன.

முன்மொழியப்பட்ட தீர்மானம் இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலைக் கண்டிப்பதை நோக்கமாகக் கொண்டது. அதே வேளையில் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவும் பணயக்கைதிகளை விடுவிக்கவும் தீர்மானத்தில் வலியுறுத்தம்பபட்டுள்ளது. பத்து நாடுகள் தீர்மானத்தை ஆதரித்த நிலையில், ரஷ்யா, சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாட்கள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. மேலும் இரண்டு நாடுகள் வாக்களிப்பதில் இருந்து விலகின.

இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர்களின் முடிவு தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாக எர்டான் கூறினார். "ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாதிகளை கண்டிக்கும் மிக அடிப்படையான பணியை செய்ய இயலாது என்றும் இந்தக் கொடூரமான குற்றங்களால் பாதிக்கப்பட்டவரின் தற்காப்பு உரிமையை உறுதிப்படுத்த முடியாது என்றும் உலகிற்கு காட்டியுள்ளனர்" என்று இந்த தீர்மானத்தை எதிர்த்த நாடுகளை அவர் விமர்சித்துள்ளார்.

בדיון היום במועצת הבטחון סיפרתי לחברות המועצה על הוריי שגרים באשקלון ורצים למקלט עשרות פעמים בכל יום. הסברתי שאני בטוח שכל מדינה אחרת שהייתה חווה טבח דומה, הייתה מפעילה כוח רב יותר מישראל ויוצאת למבצע צבאי רחב כדי להשמיד את האויב. אז מדוע כשישראל מגינה על עצמה יש מדינות צבועות… pic.twitter.com/zq5uDa8Vss

— Ambassador Gilad Erdan גלעד ארדן (@giladerdan1)

"எங்கள் இருப்புக்கான அச்சுறுத்தலை நீக்கும் முயற்சியிலிருந்து எங்களைத் தடுக்கிறது. பயங்கரவாதிகள் மீண்டும் ஒருங்கிணைய அனுமதிக்கிறது. அவர்கள் மீண்டும் படுகொலையில் ஈடுபடக்கூடும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹமாசை எதிர்த்தும் இஸ்ரேல் தரப்பை ஆதரித்தும் கொண்டுவரப்பட்ட ஐ.நா. தீர்மானத்திற்காக அமெரிக்காவிற்கும் மற்ற கவுன்சிலின் ஒவ்வொரு உறுப்பு நாடுகளுக்கும் எர்டன் நன்றி தெரிவித்தார்.

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்க்கும் ரஷ்யா அண்மையில், பயங்கர அணு ஆயுத சோதனையை நடந்தியிருக்கிறது. அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புடின் முன்னிலையில் இந்தப் பரிசோதனை நடந்துள்ளது.

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி, குறைந்தது 50 பேர் காயம்

click me!