சிங்கப்பூர் சுற்றுலா மாநாட்டில் புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை அமைச்சர் லட்சுமிநாரயணன் திறந்து வைத்தார்.
சிங்கப்பூரில் உலக சுற்றுலா பயனீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த சுற்றுலா மாநாட்டில் புதுச்சேரி அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்துகொண்டு, புதுச்சேரி அரசின் அரங்கைத் திறந்து வைத்திருக்கிறார்.
சிங்கப்பூரில் நடைபெறும் உலக சுற்றுலா பயனீட்டாளர்கள் சந்தைப்படுத்துதல் மாநாடு புதன்கிழமை தொடங்கியது. அக்டோபர் 25 முதல் 27 வரை மூன்று நாட்கள் நடக்கும் இந்த சுற்றுலா மாநாட்டில், புதுச்சேரி சுற்றுலாத்துறை பங்கேற்றிருக்கிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் சிங்கப்பூர் சென்றுள்ளார். புதன்கிழமை மாநாடு நடக்கும் இடத்திற்குச் சென்ற அவர் புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் அரங்கைத் திறந்து வைத்தார்.
சுற்றுலாத்துறை மேலாளர் சுப்ரமணியன், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி ஆஷா குப்தா ஆகியோரும் அமைச்சர் லட்சுமிநாராயணனுடன் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். புதுச்சேரி அரசின் அரங்கை சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலே பார்வையிட்டார்.
அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி, குறைந்தது 50 பேர் காயம்