Israel War : காசாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் பிராந்திய பீரங்கி படையின் துணைத் தலைவர் முஹம்மது கதாமாஷை, இஸ்ரேலிய விமானம் படை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF - Israel Defence Force) அறிவித்துள்ளது.
பயங்கரவாதக் குழுவின் மத்திய முகாம்கள் படைப்பிரிவில், பீரங்கி மேலாண்மைக்கு கடாமாஷ் தான் பொறுப்பேற்றார் என்றும், மற்றும் காசா பகுதியில் அனைத்து சுற்று சண்டைகளிலும், இஸ்ரேலுக்கு எதிரான திட்டங்களைத் திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார் முஹமது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இஸ்ரேலின் இந்த தாக்குதலில் ஆயுத தயாரிப்பு தளம் மற்றும் ராணுவ தலைமையகம் தாக்கப்பட்டது என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதற்கிடையில், காசா பகுதி சமூகங்கள் மீதான அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நேற்று சனிக்கிழமையன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ஹமாஸ் கமாண்டோவைக் கைப்பற்றியதாக இஸ்ரேல் பாதுகாப்பு நிறுவனம் (ஷின் பெட்) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
ஷின் பெட் வெளியிட்ட தகவலின்படி பிடிபட்ட அந்த நபர் ஹமாஸின் நுக்பர் கமாண்டோ படைகளில் உறுப்பினராக இருந்ததாகவும், அவர் தற்போது "சோர்வாகிவிட்டார்" என்றும், அவர் காசாவிற்கு திரும்ப முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது. பயங்கரவாதியை ஷின் பெட் விசாரணைக்காக அழைத்துச் சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுடனான போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களை இந்தியா இன்று அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
"அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள், கூடாரங்கள், தூங்க உதவும் பைகள், தார்பாய்கள், சுகாதாரப் பயன்பாடுகள் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் ஆகியவை இதில் அடங்கும்" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உயிர் காக்கும் மருந்துகள்.. இந்திய மக்கள் அளித்த அத்யாவசிய பொருட்கள் - காசாவிற்கு செல்லும் விமானம்!