ஒருவழியாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் கொடுத்த இஸ்லாமாபாத் நீதிமன்றம்

By Raghupati R  |  First Published May 12, 2023, 4:20 PM IST

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் ஜாமீன் அளித்துள்ளது இஸ்லாமாபாத் நீதிமன்றம்.


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆண்டு பதவி விலகியதிலிருந்து அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், இம்ரான் கான் அல்-காதர் அறக்கட்டளை தொடர்பான ஊழல் வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக இம்ரான் கானை விசாரிக்க 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க National Accountability Bureau (NAB) கோரியிருந்தது.

Latest Videos

undefined

பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தன. சில இடங்களில் வன்முறைச்  சம்பவங்களும் அரங்கேறின. உலக அளவில் இம்ரான் கானின் கைது பேசுபொருளானது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் ஜாமீன் அளித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க..நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாதா.! புரட்சி தளபதியை வம்புக்கு இழுத்த செல்லூர் ராஜூ.!!

இதையும் படிங்க..கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !!

click me!