
ஈராக் ராணுவத்திற்கு சவால் விடும் வகையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க கூட்டுப்படை உதவியுடன் ஈராக் ராணுவமும், ரஷ்யாவின் உதவியுடன் சிரியா அரசு ராணுவமும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதன் காரணமாக, ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டிலிருந்து பல பகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஈராக்கின் Mosul நகரில் உள்ள Zahraa பகுதியை கைப்பற்றிய ஈராக் ராணுவம், அங்கு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது. அதில், ஐ.எஸ். தீவிரவாதிகள், ராணுவத்திற்கு எதிராக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வந்துள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்தனர். வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆளில்லா விமானங்களையும் கைப்பற்றினர்.