
ஜப்பான் தலைநகர்டோக்கியோவில், கடந்த 54 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, முன்கூட்டியே பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால், ரயில்கள் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.
புவி வெப்பமயமாதல் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளிலும் பருவம் தவறிய மழை மற்றும் பனிப்பொழிவு நிலவுகிறது. ஜப்பானில் ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவு நிலவும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே நவம்பர் மாதத்திலேயே பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
தலைநகர் டோக்யோவில் பனிப்பொழிவு காரணமாக, சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பனி அடர்ந்து காணப்படுவதால், ரயில்கள் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன.
இதனால் அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திடீர் பனிப்பொழிவால் வெப்பம் குறைந்து கடும் குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 54 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதத்தில் தொடங்கியுள்ள இந்த பனிப்பொழிவு அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.