
சீனாவில் உள்ள பெங்செங்கில் மின்உற்பத்தி நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது.
வழக்கம்போல் இன்று கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, அதிக எடை கொண்ட கான்கிரீட் ஸ்லாப்புகள், இரும்பு கம்பிகள் திடீரென சரிந்து விழுந்தன.
இதில், வேலையில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இதுவரை 40 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.