அமெரிக்‍காவின் மிக உயரிய விருது - "ஒபாமா பங்குபெற்ற கடைசி அரசு விழா"

 
Published : Nov 23, 2016, 04:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
அமெரிக்‍காவின் மிக உயரிய விருது -  "ஒபாமா பங்குபெற்ற கடைசி அரசு விழா"

சுருக்கம்

அமெரிக்‍காவில், அதிபர் ஒபாமா, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்‍கு, தேச நலனுக்‍கு ஆற்றிய சேவைக்‍காக பொதுமக்‍களுக்‍கான மிக உயரிய விருதுகள் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார்.

அமெரிக்‍காவில் தேச நலன், பாதுகாப்பு, கலாச்சாரம் ஆகிய துறைகளில் ஆற்றிய சேவைக்‍காக ஆண்டுதோறும் வழங்கப்படும் Presidential Medal of Freedom எனப்படும் சுதந்திர விருதுகள், பொதுமக்‍களுக்‍கான மிக உயரிய விருதாக மதிக்‍கப்படுகிறது. இந்த ஆண்டுக்‍கான விருதுகளுக்‍காக விளையாட்டு துறையினர், கல்வியாளர்கள், தொழில் முனைவோர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 21 பிரபலங்கள் தேர்ந்தெடுக்‍கப்பட்டனர். இவர்களுக்‍கு விருதுகள் வழங்கும் விழா அமெரிக்‍க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. கூடைப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கிய Michael Jordan மற்றும் Kareem Abdul-Jabbar, Robert De Niro உள்ளிட்ட நடிகர்கள், பாடகியும் நடிகையுமான Diana Ross, மைக்‍ரோ சாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில்கேட்ஸ், அவரது மனைவி Melinda உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டு, அதிபர் ஒபாமாவிடம் இருந்து விருதுகளைப் பெற்றுக்‍ கொண்டனர். அமெரிக்‍காவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள நிலையில் இவ்விழா நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்‍கது.

PREV
click me!

Recommended Stories

தாய்-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை உடைப்பு.. இந்தியா கடும் கண்டனம்..!
உலகம் அழியப்போகுது.. கானா சாமியார் கட்டும் நோவா பேழையில் தஞ்சம் புகும் மக்கள்!