
ணம் செல்லாத அறிவிப்பு : பிற நாடுகளில் அமல்படுத்தப்பட்டு தோல்வியடைந்த சம்பங்கள்!
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பை போன்றே உலகின் மற்ற நாடுகளிலும் நடந்துள்ளது. எனினும் அவை பெரும்பாலும் தோல்வியிலே முடிவடைந்துள்ளது.
1982-ல் கானா அரசு வரி ஏய்ப்பை கட்டுப்படுத்துவதற்காக 50 ’செய்டி’ கரன்சியை செல்லாது என அறிவித்தது. ஆனால் கானா மக்கள் வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்த தொடங்கினர். இதனால் அரசின் முயற்சி தோல்வியடைந்தது.
1984-ம் ஆண்டு நைஜீரியாவில் ஊழலை ஒழிப்பதற்காக நைஜீரியாவின் ராணுவ அரசு புது கரன்சி நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுத்த இந்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.
1987-ம் ஆண்டு மியான்மர் நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க 80 சதவீத கரன்சி நோட்டுகளை செல்லாது என ராணுவ அரசு அறிவித்தது. ஆனால் இதன் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் பலர் உயிரிழக்க நேரிட்டது.
1991-ம் ஆண்டு சோவியத் யூனியனில் கரன்சி மதிப்பை கூட்டுவதற்கு 50,100 ரூபல் நோட்டுகளை செல்லாது என்று மிக்கேல் கோர்பஷேவின் அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த எட்டே மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டது.
1993-ம் ஆண்டு சையர் நாட்டில் சர்வாதிகாரி மொபுடுவின் ஆட்சியில் கரன்சி சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், மேலும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து 1997-ல் மொபுடுவின் ஆட்சி கலைக்கப்பட்டது.
1996ம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசு பேப்பர் கரன்சி நோட்டுகளை பிளாஸ்டிக் நோட்டுக்களாக மாற்றியது.கள்ள நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உலகில் முதன் முறையாக இது அறிமுகப்படுத்தப்பட்டது.
2015ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரசு கள்ள நோட்டை தடுப்பதற்காக 30 வருடமாக இருந்த நோட்டுகளை செல்லாது என அரசு அறிவித்து, புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.
2015ம் ஆண்டு ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே நூறு டிரில்லியன் டாலர் நோட்டை அறிமுகப்படுத்தினார். இதன் மதிப்பு உலக சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பில் 30 ரூபாயாக குறைந்தது.
2010ல் வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் கரன்சி சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார். ஆனால் இந்த நடவடிக்கையால் மக்கள் உணவில்லாமல், தவிக்கும் நிலை ஏற்பட்டது.
2002ம் ஆண்டு ஐரோப்பாவில் உள்ள பன்னிரண்டு நாடுகள், தங்கள் கூட்டமைப்பின் சார்பாக தங்களின் கரன்சியாக யூரோவை மாற்றிக் கொண்டார்கள்.