'ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!' 3 அடி உயரத்திற்கு சுனாமி பேரலைகள் எழுந்ததால் மக்‍கள் பீதி..!!

 
Published : Nov 22, 2016, 11:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
'ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!' 3 அடி உயரத்திற்கு சுனாமி பேரலைகள் எழுந்ததால் மக்‍கள் பீதி..!!

சுருக்கம்

ஜப்பானின் வடபகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்‍கம் ஏற்பட்டது. ரிக்‍டர் அளவுகோலில் 7 புள்ளி 3 ஆக பதிவான இந்த நிலநடுக்‍கம் காரணமாக, சுனாமி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, பாதிப்புக்‍குள்ளான பகுதியில் வசிக்‍கும் மக்‍களை பாதுகாப்பான இடங்களுக்‍குச் செல்லும்படி அரசு அறிவுறுத்தியது.

கடந்த 2011-ம் ஆண்டு சுனாமி தாக்‍குதலுக்‍குள்ளான அதே வடக்‍கு பசிபிக்‍ கடலோர பகுதியில் அமைந்துள்ள Fukushima நகருக்‍கு அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று காலை சுமார் 6 மணி அளவில் கடுமையான நிலநடுக்‍கம் ஏற்பட்டது. ரிக்‍டர் அளவுகோலில் 7 புள்ளி 3-ஆக பதிவான இந்த நிலநடுக்‍கம், டோக்‍கியோ நகரிலும் உணரப்பட்டதாக ஜப்பான் வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. (2108)

நிலநடுக்‍கம் காரணமாக, சுனாமி எச்சரிக்‍கை விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசித்து வந்த மக்‍கள் பாதுகாப்பான இடங்களுக்‍கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. 

இந்த நிலநடுக்‍கம் காரணமாக, சுமார் 3 அடி உயரத்திற்கு அலைகள் Fukushima பகுதியை சுற்றிலும் சீறிப்பாய்ந்தது. இதேபோல், Miyagi பகுதியிலும் 4 அடி உயரத்திற்கு மேல் அலைகள் ஊருக்‍குள் பாய்ந்து வருவதை காண முடிந்தது. 

ஆயினும், சுனாமியால் Fukushima Daiichi அணுமின்​நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்‍கம் குறித்து ஆர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் Shinzo Abe-க்‍கு தெரிவிக்‍கப்பட்டது. மக்‍கள் நலனைக்‍ காக்‍க தேவையான நடவடிக்‍கைகள் எடுக்‍கப்படும் என அவர் உறுதி அளித்தார். 

இதனிடையே, ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்‍கத்தின் அளவு 6 புள்ளி 9 என அமெரிக்‍க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 2011-ம் ஆண்டு பேரழிவுக்‍குக்‍ காரணமான சுனாமி ஏற்பட்ட அதே பகுதியில்தான் இன்றும் சுனாமி தாக்‍குதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்‍கது. 

இந்நிலையில், Fukushima மற்றும் Miyagi ஆகிய பகுதிகளில் சுனாமி எச்சரிக்‍கை கைவிடப்பட்டபோதிலும், அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிக்‍கப்படுவதாக ஜப்பான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த நிலநடுக்‍கத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

தாய்-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை உடைப்பு.. இந்தியா கடும் கண்டனம்..!
உலகம் அழியப்போகுது.. கானா சாமியார் கட்டும் நோவா பேழையில் தஞ்சம் புகும் மக்கள்!