“நேருக்கு நேர் மோதிக்கொண்ட 2 ரயில்கள்..!!” – 8 பேர் பலி..!! – பலர் படுகாயம்

 
Published : Nov 25, 2016, 03:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
“நேருக்கு நேர் மோதிக்கொண்ட 2 ரயில்கள்..!!” – 8 பேர் பலி..!! – பலர் படுகாயம்

சுருக்கம்

ஈரான் நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 8 பேர் பலியாகினர்.

ஈரான் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷரவுட் நகரையொட்டி ஹப்-கான் ரெயில் நிலையம் உள்ளது.

இந்த ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 7.40 மணியளவில் புறப்பட்ட அதிவிரைவு ரயிலும், எதிரே வந்த ரயிலும் எதிர்பாராத விதமாக ஒரே தண்டவாளத்தில் இணைந்து நேருக்குநேராக மோதிக்கொண்டன.


இந்த ரயில் மோதிய வேகத்தில் இரு ரெயில்களின் எஞ்சின் பெட்டிகள் மற்றும் சில பயணிகள் பெட்டிகள் தீபிடித்து எரியத் தொடங்கின.

இந்த இதுவரை 8க்கும் மேற்பட்டோர் பலியாகிஉள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

தாய்-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை உடைப்பு.. இந்தியா கடும் கண்டனம்..!
உலகம் அழியப்போகுது.. கானா சாமியார் கட்டும் நோவா பேழையில் தஞ்சம் புகும் மக்கள்!