மத்திய ஆப்ரிக்க நாட்டுக்கு லட்சம் கோடி ரூபாயுடன் தப்புகிறாரா ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்?

By Dhanalakshmi GFirst Published Nov 17, 2022, 2:14 PM IST
Highlights

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார், அவரது அடுத்த திட்டம் என்ன என்பது அனைத்தும் மறைமுகமாக ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை. அப்போது கிரிமியா மீது தாக்குதல் நடத்தி இருந்தார். தற்போதும் பாலி ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இதற்குக் காரணம் உக்ரைன் மீதான போரும், இதைத் தொடர்ந்து ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையும் காரணமாக கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும், உச்சி மாநாட்டுக்கு வந்தால், விளாடிமிர் புடின் விமர்சிக்கப்படுவார் என்றும், உலக அரங்கில் தனக்கு அந்த அசிங்கம் நேரிடக் கூடாது என்பதாலும் மாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

இந்த நிலையில்தான் மத்திய ஆப்ரிக்க நாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு விளாடிமிர் புடின் தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது. மத்திய ஆப்ரிக்க குடியரசு அதிபர் பாஸ்டின் அர்காஞ்ச் டவ்டேரா உடன் சமீபத்தில் விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தாக செய்தி வெளியாகியுள்ளது. 

ரஷ்ய நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாகவே ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய ஆப்ரிக்க நாட்டின் பாதாள கிடங்கில் பதுக்கி இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது. இந்த நிதியை ரகசிய இடத்தில் பாதுகாக்கவும், நாளை புடினுக்கு ஏதாவது ஆபத்து என்றாலும் நாட்டை விட்டு வெளியேறவும் ''வாக்னேர்'' என்ற  தனியார் ராணுவத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Russia Putin:ரஷ்ய அதிபர் புதின் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் ஏன் ஒதுங்கினார்? காரணம் என்ன?

மத்திய ஆப்ரிக்காவின் அதிபரும், விளாடிமிர் புடினும் கடந்த வெள்ளிக்கிழமை தொலைபேசியில் உரையாடல் மேற்கொண்டதாக ரஷ்யா அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டு இருந்தது. இந்த அறிக்கையில், ''இருதரப்பு நாடுகளின் அரசியல், வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, எரிபொருள் மற்றும் எனர்ஜி குறித்து பேசப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

ஆனால், அவர்களுக்கு இடையில் நடந்தது விசுவாசத்தை காட்டுவதற்கான பேச்சு என்று ஜெனரல் எஸ்.வி.ஆர் டெலிகிராம் சேனல் தெரிவிதுள்ளது. அந்த சேனல் வெளியிட்டு இருக்கும் தகவலில், '' இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆப்பிரிக்க அதிபரின் பாதுகாப்பு "விசுவாசத்தை" நோக்கமாகக் கொண்டது. ரஷ்ய கூட்டமைப்புக்கு வெளியே தனக்கும் தனது நட்பு வட்டத்திற்கும் இடையே, அவசரகால சூழ்நிலையில் வெளியேறுவதற்கான, நம்பிக்கைக்குரிய நாடாக மத்திய ஆப்பிரிக்க குடியரசை புடின் கருதுகிறார். தற்போது வெளியேறுவது தனக்கு நல்லதாக இருக்கும் என்று புடின் கருதுகிறார். அதற்கான சாத்திய கூறுகளையும் தேடி வருகிறார்'' என்று தெரிவித்துள்ளது.

எல்லா ரகசியமும் லீக்.. கனடா பிரதமரை வெளுத்து வாங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங் - வைரல் வீடியோ !

புற்றுநோயால் புடின் போராடி வருவதாக பல சேனல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ரஷ்ய தலைவர் சமீபத்தில் அதிகளவில் எடை குறைந்து மெலிந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைனை தாக்கி வருகிறது. இதுவும் புடினுக்கு தற்போது சர்வதேச அளவில் பெரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. புடினுக்கு தற்போது தொடர் இருமல் இருந்து வருவதாகவும், கட்டுப்படுத்த முடியவில்லை என்று சில செய்திகள் வெளியாகி வருகிறது.  

இதுமட்டுமின்றி,  தொடர்ந்து வாந்தி மற்றும் குறிப்பிட்ட உணவை எடுத்துக் கொள்ள முடியாத நிலையில், பசியின்மை இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் பேசுகையில் அதிகளவில் இருமல் காணப்பட்டதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், தொடர்ந்து கிரம்ளின் மாளிகை இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறது. 

click me!