Russia Putin:ரஷ்ய அதிபர் புடின் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் ஏன் ஒதுங்கினார்? காரணம் என்ன?

By Pothy Raj  |  First Published Nov 17, 2022, 11:20 AM IST

இந்தோனேசியாவில் நடந்து முடிந்த 17வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்காமல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒதுங்கியது பலருக்கும் புருவத்தை உயர்த்தியுள்ளது. 


இந்தோனேசியாவில் நடந்து முடிந்த 17வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்காமல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒதுங்கியது பலருக்கும் புருவத்தை உயர்த்தியுள்ளது. 

ரஷ்யஅதிபர் புதின் ஒதுங்கியிருக்க என்ன காரணமாக இருக்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Latest Videos

undefined

கடந்த 2014ம் ஆண்டு ஜி-20 நாடுகள் மாநாட்டில் புடின் பங்கேற்காமல் ஒதுங்கினார், அடுத்த சில மாதங்களில் கிரிமியா பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்தது. 8 ஆண்டுகளுக்குப்பின், உக்ரைன் மீது உக்கிரமாக போர் தொடுத்துவிட்டு, மேற்கத்திய நாடுகளுக்கு அணுஆயுத தாக்குதல் எச்சரிக்கை கொடுத்துவிட்டு, இப்போது,  இந்தோனேசியாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்காமல் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்காமல் ஒதுங்கியுள்ளார்.

இந்த உச்சி மாநாட்டுக்குப்பின் ரஷ்ய அதிபர் புடின் ஏதாவது விபரீதமாக நடவடிக்கை எடுப்பாரா அல்லது, உக்ரைன் மீது அணுஆயுதத் தாக்குதல் ஏதும் நடத்துவாரா அல்லது ஏற்கெனவே உலக நாடுகளால் ரஷ்யா புறக்கணிக்கப்பட்டு பொருளாதாரம் மோசமடைந்தநிலையில் மனம் திருந்துவாரா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ரஷ்ய அதிபர் புதின் செயல்பாடு குறித்து சர்வதேச அரசியல் வல்லுநர்கள், கொள்கை ஆலோசகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மோசமான அவமானம்

பெரும்பாலான சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்துப்படி, “ஜி20 மாநாட்டுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சென்றிருந்தால், மோசமாக அவமானப்பட்டிருப்பார். ஏற்கெனவே உலக நாடுகளால் கண்டிக்கப்பட்ட புடின் மேலும் கண்டிக்கப்படாமல் தடுக்கவே, அவமானப்படாமல் தடுக்கவே புடின் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

G-20 Summit:ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும் டிஜிட்டல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

டயலாக் ஆப் சிவிலைசேஷன் இன்ஸ்ட்டியூட் ஆய்வாளர் அலெக்சி மலாஷ்ஹென்கோ கூறுகையில் “ பொதுவெளியில் மீண்டும் அவமானப்பட விளாதிமிர் புடின் விரும்பவில்லை. 2014ம்ஆண்டு பிரிஸ்பேன் மாநாட்டில் நடந்த சம்பவம் அனைவருக்கும் நினைவிருக்கும். உலகத் தலைவர்கள் அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்தபோது, அதில் விளாதிமிர் புடின் ஓரமாக நிறுத்தப்பட்டார்.

யார் தயாராக இருக்கா

உச்சி மாநாட்டுக்குச் சென்றுவிட்டாலே உலகத் தலைவர்களுடன் பேச வேண்டும், புகைப்படம் எடுக்க வேண்டும். ஆனால், ரஷ்ய அதிபர் புடின் செயலுக்கு எந்தத் தலைவர்கள் அவருடன் பேசுவதற்கும், புகைப்படம் எடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். 

இந்தோனேசியாவில் நடந்த ஜி20 மாநாட்டில் உக்ரைன் போர் குறித்தும், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்தபோரால் எரிபொருள் சந்தை பாதிக்கப்பட்டது, உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டது குறித்துதானே விவாதிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்

புதின் மாறவில்லை

ரஷ்யாவுக்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் பியாதர் லுகன்யெவ்  கூறுகையில் “ உக்ரைன் விவகாரத்தை புடின் கைவிடுவதாக இல்லை. உக்ரைன் மீது தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பது விளாடிமிர் புடினுக்குத் தெரியும். அதிலிருந்து அவர் மாறவில்லை. அதேநேரம் மற்ற பகுதியையும் அவர் அறிவார்.

Explainer: டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு: இதனால் இந்தியாவுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்? முக்கியத்துவம் என்ன?

அதனால்தான், வீடியோ மூலம் கூட ஜி20 மாநாட்டில்பேசுவதற்கு விளாடிமிர் புடின் தயாராகஇல்லை. உக்ரைன் அதிபர் விளோடிமிர் ஜெலன்ஸ்கி தன்னுடைய நிலைப்பாட்டையும், ரஷ்யாவுக்கு உலகத் தலைவர்கள் மூலம் பதிலடிகொடுக்க வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது” எனத் தெரிவித்தார்

ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்குப் பதிலாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ பங்கேற்றார். அவரும் மாநாடு முடிவதற்கு முன்பாகவே இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டுவிட்டார். உலகத் தலைவர்கள் குழுவாக நின்று எடுக்கும்  புகைப்படத்திலும் ரஷ்ய பிரதிநிதி  பங்கேற்கவில்லை.

மேற்கத்திய எதிர்ப்பு

பெரும்பாலான மேற்கத்திய நாடுகளின் தலைவர்களால் விளாதிமிர் புடின் புறக்கணிக்கப்பட்டுள்ளநிலையில், ரஷ்யாவுடன் பாரம்பரியமாக  நல்ல உறவுகளை கொண்டிருக்கும் நாடுகளுடன் அல்லது அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிராக போராடும் நாடுகளுடனும் உறவுகளை மேம்படுத்த புடின் தற்போது முயன்று வருகிறார்.

எல்லா ரகசியமும் லீக்.. கனடா பிரதமரை வெளுத்து வாங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங் - வைரல் வீடியோ !

அமெரிக்க எதிர்ப்பு

ஆர் பொலிடிக் என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனர் டைட்டானியா ஸ்டானோவியா கூறுகையில் “ விளாடிமிர் புடினைப் பொறுத்தவரை, ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணிப்பு என்பது, நடுநிலை உறவுகள் கொண்டிருக்கும் நாடுகளுடனான உறவுகளைப் பாதிக்காது என நம்புகிறார். ரஷ்யாவின் அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாடு அவருக்கு அதிகமான ஆதரவை தரும் என நம்புகிறார்.

இதனால்தான் ஆப்பிரிக்கா, ஆசியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் புதின் உறவை பலப்படுத்துகிறார். அதாவது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க ரஷ்ய அதிபர் புதின் முயல்கிறார்” எனத் தெரிவித்தார்.


 

click me!