ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு நோபல் பரிசு?

is nobel for economy to raghuram rajan
is nobel for economy to raghuram rajan


இந்த ஆண்டுக்கு பொருளாதார துறையில் நோபல் பரிசு பெற தகுதி உடையோர் பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

ஆய்வு

Latest Videos

பல்வேறு துறைகளில் ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் நன்மை விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் உலகளவில் வழங்கப்படும் பெரிதும் மதிக்கப்படும் பரிசு நோபல் பரிசாகும்.

இந்த ஆண்டுக்கு பல்வேறு துறைகளில் நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பொருளாதார துறையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுபவர் அல்லது பெறுபவர்களின் பெயர் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டுக்கு பொருளாதார துறையில் நோபல் பரிசு பெற தகுதி உடையோர் பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பெயரும் இடம் பிடித்துள்ளது. பெறுநிறுவன நிதியில் முடிவுகளின் பரிமாண பிரதிபலிப்பு பங்களிப்பு தொடர்பான அவரது ஆய்வுக்காக இந்த பட்டியலில் பெயர் இடம் பிடித்துள்ளது.

அமெரிக்கா

2008ம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரத்தில் மிகப்பெரிய தேக்க நிலை ஏற்பட்டது. இதனை அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே சரியாக கணித்து சொன்னவர் ரகுராம் ராஜன். இந்தியாவின் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த போதும் சிறப்பாக செயல்பட்டார். ரகுராம் ராஜனுக்கு பதவி நீடிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அவருக்கு பதவி நீடிப்பு வழங்கவில்லை.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image