அணுகுண்டு முதல் ஏவுகணை வரை: ஈரானின் திறன் என்ன? உலகம் ஏன் கவலைப்படுகிறது?

ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. ஈரானின் அணு ஆயுதத் திட்டம் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாகவும், மத்திய கிழக்கில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திறன் பற்றிய விவரங்களை இதில் காணலாம்.


Iran US Nuclear Deal: ஈரான் நீண்ட காலமாக ரகசியமாக அணு குண்டுகளை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அதிகாரபூர்வமாக ஈரான் தற்போது அணு ஆயுத திறன் கொண்டதாக இல்லை. ஆனால் ஈரான் ஆயுதங்களை தயாரித்து இருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். ஈரானின் அணு ஆயுதத்தால் இஸ்ரேலுக்கு அதிக ஆபத்து உள்ளது. ஈரான் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்வது போல், அணு ஆயுத வல்லமை படைத்த நாடாக மாறினால், அது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில், ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திறன் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஈரானிடம் அணு ஆயுதம் உள்ளதா?
ஈரானிடம் தற்போது அதிகாரப்பூர்வமாக அணு ஆயுதம் எதுவும் இல்லை. அவர்கள் நீண்ட காலமாக ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருகின்றனர். ஈரான் தலைவர்கள் அணு ஆயுதங்களை தயாரிக்க முடிவு செய்தால், குறுகிய காலத்தில் அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான தகவல்களும், உள்கட்டமைப்பும் அவர்களிடம் இருப்பதாக மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Latest Videos

ஈரானின் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில் அணுசக்தி திட்டம்: 
ஈரான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில் அணுசக்தி திட்டத்தை (civilian nuclear energy program) கொண்டுள்ளது. ஈரான் அணுசக்தியை ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தவில்லை என்று கூறுகிறது. ஆனால் 2000-களின் முற்பகுதியில் ஈரானின் ரகசிய அணுசக்தி தளங்கள் மற்றும் ஆராய்ச்சி பற்றிய தகவல்கள் வெளியானதால் உலகம் முழுவதும் கவலை ஏற்பட்டது. அப்போதிருந்து ஈரானின் அணுசக்தி திட்டம் சர்வதேச விவாதம் மற்றும் ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2015ல் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது.

டிரம்புக்கு பதிலடி கொடுக்க ஈரான் ஆயத்தம்; ஏவுகணைகளுடன் தயாராகி வரும் பதுங்கு குழிகள்!!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்:
அமெரிக்கா 2018-ல் தன்னிச்சையாக இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. அதன் பிறகு ஈரான் தனது அணுசக்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது. இதனால் ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களை உருவாக்கும் என்ற கவலைகள் அதிகரித்துள்ளன. அக்டோபர் 2024-ல் இஸ்ரேல் ஈரான் மீது மிகப்பெரிய நேரடி தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை உற்பத்தி வசதிகள் குறி வைக்கப்பட்டன. டெஹ்ரானுக்கு வெளியே உள்ள பர்சின் ராணுவ வளாகத்தில் இஸ்ரேல் ஒரு கட்டிடத்தை அழித்ததாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இங்கு விஞ்ஞானிகள் ரகசிய அணு ஆயுதங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

அணு ஆயுதங்களை உருவாக்க ஈரானுக்கு எவ்வளவு காலம் தேவை?
ஈரான் நினைத்தால் சில மாதங்களில் அணு ஆயுதங்களை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2018 க்குப் பிறகு ஈரான் தனது அணு செறிவூட்டல் திறனை அதிகரித்துள்ளது. ஜூன் 2024-ல் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், ஈரான் “ஒன்று அல்லது இரண்டு வாரங்களில்” அணு ஆயுதம் தயாரிக்க தேவையான யுரேனியம் அல்லது புளூட்டோனியம், அணு குண்டுகள் தயாரிக்க பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்றார்.

ஈரானின் அணுசக்தி வசதிகள் எங்கே உள்ளன?
ஈரானில் 12-க்கும் அதிகமான இடங்களில் அணுசக்தி தொடர்பான வசதிகள் உள்ளன. இதன் மிகப்பெரிய அணுசக்தி வசதி நடான்சில் உள்ளது. ஈரானின் ஒரே அணுமின் நிலையம் பாரசீக வளைகுடா கடற்கரையில் உள்ள புஷேரில் உள்ளது.

Iran vs Israel war | ஈரான் அணுஆயுத ஆலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்! வெளியான அதிர்ச்சி தகவல்

ஈரானின் ஏவுகணை திறன், அமெரிக்காவை தாக்கலாம்
ஈரானிடம் குரூஸ் முதல் பாலிஸ்டிக் வரை பல வகையான ஏவுகணைகள் உள்ளன. ஏவுகணை திறனைப் பொறுத்தவரை இது மத்திய கிழக்கில் ஒரு சக்திவாய்ந்த நாடு. மத்திய கிழக்கில் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை பட்டியலை ஈரான் கொண்டுள்ளது என்று அமெரிக்க உளவுத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகள் 2,000 கி.மீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை. இது முழு மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளை உள்ளடக்கியது. ஈரானிடம் தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இல்லை. ஈரானில் இருந்து ஏவப்பட்டால் அமெரிக்காவை அடையும் அளவுக்கு அதன் ஏவுகணைகளின் வரம்பு அதிகமாக இல்லை.

ஈரான் அணு ஆயுதங்களை பெற்றால் என்ன நடக்கும்?
அணு ஆயுதம் கொண்ட ஈரான், இஸ்ரேலுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் என்று பல வெளியுறவு கொள்கை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவுடன் ராணுவ மற்றும் பொருளாதார கூட்டாண்மையை அதிகரிப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். ஈரான் சமீபத்தில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு தனது டிரோன்களை வழங்கியது.

click me!