டிரம்புக்கு பதிலடி கொடுக்க ஈரான் ஆயத்தம்; ஏவுகணைகளுடன் தயாராகி வரும் பதுங்கு குழிகள்!!

Published : Mar 31, 2025, 12:47 PM ISTUpdated : Mar 31, 2025, 02:54 PM IST
டிரம்புக்கு பதிலடி கொடுக்க ஈரான் ஆயத்தம்; ஏவுகணைகளுடன் தயாராகி வரும் பதுங்கு குழிகள்!!

சுருக்கம்

டிரம்ப் அச்சுறுத்தலுக்குப் பிறகு ஈரான் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுக்கு உட்பட்ட நிலைகளைத் தாக்க ஈரான் பதுங்கு குழிகளை ஏவுகணை ஆயுதக் களஞ்சியமாக தயார் செய்து வருவதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக டிரம்பின் அச்சுறுத்தலுக்குப் பிறகு பதிலடி கொடுக்க ஈரான் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஈரான் தனது ஏவுகணைகளை நாடு முழுவதும் உள்ள பதுங்கு குழி போன்ற இடங்களில் ஏவுவதற்கு வசதியாக தயார் நிலையில் வைத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது எந்த வகையிலான வான்வழித் தாக்குதளையும் எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரானை வெடிகுண்டுகளால் மிரட்டியதுடன், உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீது கோபமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார். அமெரிக்காவின் என்பிசி  பத்திரிக்கையாளரான கிறிஸ்டின் வெல்கருக்கு டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேட்டி அளித்து இருந்தபோது அவ்வாறு கூறி இருந்தார். அணுஆயுத தடைக்கு ஈரான் ஒத்துழைக்காவிட்டால், அந்த நாட்டின் மீது வெடிகுண்டு வீசப்படும், அது முன்பு எப்போதும் இல்லாதது போல் இருக்கும் என்று டிரம்ப் அச்சுறுத்தி இருந்தார்.

டொனால்ட் டிரம்பின் வெடிகுண்டு மிரட்டலுக்கு ஈரான் அடிபணிய மறுத்துவிட்டது, தேவைப்பட்டால் "அமெரிக்காவுக்கு உட்பட்ட நிலைகளை" தாக்குவதற்கு எதுவாக அதன் பதுங்கு குழிகளை ஏவுகணை ஆயுதக் களஞ்சியமாக தயார் செய்து வருவதாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகமான டெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ராணுவ உதவி கடன் இல்லை! பணத்தை திருப்பி தர முடியாது! ஜெலன்ஸ்கி அதிரடி!

ஜெலன்ஸ்கியுடன் இருந்து புடினுக்கு தாவிய டிரம்ப்:
ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி, டெஹ்ரான் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால், ஈரான் மீது குண்டுவீசுவதான் ஒரே வழி என்று மிரட்டல் விடுத்து இருந்தார். முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை "சர்வாதிகாரி" என்று குறிப்பிட்டு இருந்த டிரம்ப், உக்ரைன் அதிபரை வார்த்தைகளால் விளாசி வந்தார். ஜெலென்ஸ்கியின் சமீபத்திய வாஷிங்டன் விஜயத்தின் போது இரு தலைவர்களும் மோதிக்கொண்டனர். அங்கு டிரம்ப் உக்ரைனின் போரின்போது ஜெலன்ஸ்கியின்  நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார். போருக்கு காரணமே ஜெலன்ஸ்கி என்று குறிப்பிட்டு இருந்தார். 

டிரம்ப் பேச்சை நிராகரித்து உக்ரைன் மீது மீண்டும் புடின் தாக்குதல்:
தனது கோபத்தை புடின் அறிந்திருந்தும், ரஷ்ய அதிபருடன் தனக்கு இன்னும் "நல்ல உறவு" இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். உக்ரைன் தொடர்பாக புடின் "சரியான முடிவுகளை" எடுத்தால் தனது கோபம் தணிந்துவிடும் என்று டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா போர் முப்பது நாட்களுக்கு நிறுத்தப்படும் என்று டிரம்ப் அறிவித்து இருந்தார். ஆனால், அவரது பேச்சை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நிராகரித்து, உக்ரைனின் வடகிழக்கு மண்டலங்களில் போரை மீண்டும் துவக்கியுள்ளார்.

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால், டிரம்ப் எச்சரிக்கை:
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின்மீது கடுமையான வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்து இருந்தார். அந்த வகையில், ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக வெனிசூலாவையும் டிரம்ப் மிரட்டி வந்தார். வெனிசூலா நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூறி இருந்தார். அதேபோல், இதை வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அமல்படுத்தியும் இருக்கிறார். தற்போது ஈரான் பக்கம் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார்.

ஈராக் அணுசக்தி ஒப்பந்தமும், டிரம்பின் தொடர் பேச்சுவார்த்தையும்:

டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் அமெரிக்கா 2015 அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகியது. மேலும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்தன. தனது நிர்வாகம் பேச்சுவார்த்தைக்காக திறந்திருப்பதாக டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஈரானின் புதிய அதிபர் அதிபர் மசூத் பெசெஷ்கியன்:

ஈரானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மசூத் பெசெஷ்கியன், அரசு ஊடகங்களில் ஒளிபரப்பான ஒரு அறிக்கையில் டிரம்பின் கருத்துக்களுக்கு பதிலளித்தார். வாஷிங்டனுடனான நேரடி பேச்சுவார்த்தைகளை நிராகரித்த அதே வேளையில், ஓமன் மூலம் மத்தியஸ்தம் செய்யப்பட்ட மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடரலாம் என்பதை ஒப்புக்கொண்டார்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!