
Israel Operation Rising Lion : இஸ்ரேல் ஈரான் மீது "முன்னெச்சரிக்கைத் தாக்குதலை" தொடங்கியது, ஈரானிய அணு மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதலை மேற்கொண்டது. ஈரானிய அரசு செய்தி நிறுவனம் இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளது. ஆபரேஷன் ரைசிங் லயன் எனப்படும் இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் உறுதிப்படுத்தப்பட்டது. ஈரானின் அணு ஆயுத உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கைகளை ஈரான் மேற்கொண்டது. -. இது இஸ்ரேலின் உயிர்வாழ்வதற்கு ஆபத்தான சூழல்” என்று நெதன்யாகு கூறினார். சந்தேகத்திற்கிடமான அணு ஆராய்ச்சி வசதிகள், நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு மற்றும் புரட்சிகர காவலர் தலைமையகம் ஆகியவை இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்திய இடங்களாகும்.
ஈரானின் அணு மற்றும் ராணுவத் தலைவர்களை இலக்காகக் கொண்ட இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல்களில் உயர் ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஐஆர்கிசி தளபதி ஹொசைன் சலாமி, தலைமைத் தளபதி முகமது பாகேரி மற்றும் அணு விஞ்ஞானிகள் முகமது அலி ஷம்கானி, உச்ச தலைவர் காமெனியின் சிறந்த ஆலோசகர் மற்றும் ஈரானின் முன்னணி அணு பேச்சுவார்த்தையாளர் ஆகியோரின் இறந்ததை ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும் இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதல்களில் குறைந்தது 6 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"அப்துல்ஹமீத் மினூசெர், அஹ்மத்ரேசா ஜோல்ஃபகரி, அமீர் ஹொசைன் ஃபெக்கி, மொட்டல் லெப்லிசாதே, முகமது மெஹ்தி தெஹ்ரான்சி மற்றும் ஃபெரேடவுன் அப்பாசி ஆகியோர் இஸ்ரேலின் தாக்குதலில் உயரிழந்த அணு விஞ்ஞானிகள் என்று டாஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனியர் புரட்சிகர காவலர் தளபதி கோலம் அலி ரஷீத் மற்றும் சிறந்த அணு விஞ்ஞானிகளும் வெள்ளிக்கிழமை ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"மேஜர் ஜெனரல் கோலம் அலி ரஷீத்தின் இறந்ததையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது," அதே நேரத்தில் அணு விஞ்ஞானிகள் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி மற்றும் ஃபெரேடவுன் அப்பாசி இறந்ததாகவும் டாஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஈரானிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி முகமது பாகேரி வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களின் போது தலைநகர் உட்பட பல நகரங்களைத் தாக்கியதில் கொல்லப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஈரானிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி, ஐஆர்கிசியின் தளபதி மற்றும் ஈரானின் அவசரகால கட்டளைத் தளபதி உட்பட 200க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் ஈரான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐடிஎஃப்) உறுதிப்படுத்தின.