ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவரின் தலைவருக்கு எதிராக ஐ.சி.சி வாரண்ட்டை பிறப்பித்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக ஐசிசி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
உக்ரைன் மீது போர் அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் 2022 பிப்ரவரி 24ஆம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கினார். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் நடந்த மோதல் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
undefined
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மேலும் சில நட்பு நாடுகளின் உதவியுடன் உக்ரைன் உத்வேகத்துடன் பதில் தாக்குதல் நடத்தி ரஷ்யாவுக்கு தக்க பதிலடியை தந்து வருகிறது. போர் தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை தீர்வு ஏதும் எட்டப்படவில்லை.
இப்போர் தொடர்பான மனுவை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அந்நாட்டின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா - பெலோவா ஆகியோரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த போர் காரணமாக சட்டவிரோதமாக பல மக்கள், குழந்தைகளை நாடு கடத்தி இடமாற்றம் செய்யும் சூழல் உருவானது.
இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்
உக்ரைன் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு ரஷ்ய அதிபர் புதின் தான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொறுப்பு எனக் கூறி இந்த உத்தரவை சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவரின் தலைவருக்கு எதிராக ஐ.சி.சிவாரண்ட்டை பிறப்பித்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
உக்ரைன் வெளியுறவுத்துறை இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது. இதுகுறித்து பேசிய ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம், சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் இருந்து வரும் கைது வாரண்டும் சட்டப்படி செல்லத்தக்கதல்ல. அது எங்களை ஒன்றும் செய்யாது. அதனால், அந்த கைது வாரண்டில் அர்த்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க..இரண்டாக பிரியும் ஆப்பிரிக்க கண்டம்.. புதிதாக உருவாகும் கடல் - யாரும் பார்த்திராத அதிசய நிகழ்வு
இதையும் படிங்க..ஒரே டார்ச்சர்.!! மகளின் தோழியிடம் ஆபாசமாக பேசிய தந்தை.. கடைசியில் தோழி எடுத்த அதிரடி முடிவு