நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சனிக்கிழமையன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சனிக்கிழமையன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் சுமார் அதிகாலை 3:44 மணியளவில் ஏற்பட்டது. கெமடெக் தீவின் 10 கிமீ ஆழத்தில் 2வது முறையாக இந்த நிலடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் அறியப்படவில்லை. இதற்கு முன்னதாக கடந்த வியாழக்கிழமை பிற்பகலின் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது.
கெர்மடெக் தீவுகளைத் தாக்கிய நிலநடுக்கத்தால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கு சுனாமி அச்சுறுத்தல் விடப்படவில்லை. ஆனால், அமெரிக்க புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) அறிக்கையில், பூகம்பத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ தொலைவில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு சுனாமி அலைகள் வரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் அவசரகால மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில், “தெற்கு கெர்மடெக் தீவுகளில் 7.0 நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நியூசிலாந்திற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை எனவும், தொடரும் நிலநடுக்கம் நீண்டதாகவோ அல்லது வலுவாகவோ இருந்தால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் ஒதுங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இரண்டாக பிரியும் ஆப்பிரிக்க கண்டம்.. புதிதாக உருவாகும் கடல் - யாரும் பார்த்திராத அதிசய நிகழ்வு
இதேபோல், ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் அருகே உள்ள பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை