பன்னாட்டு சேவையை அதிகரிக்கும் இண்டிகோ.. இந்தியாவிலிருந்து இரு முக்கிய நாடுகளுக்கு இனி அதிக அளவில் Flight சேவை!

By Ansgar R  |  First Published Jul 22, 2023, 2:48 PM IST

விமான சேவை நிறுவனமான இண்டிகோ, தனது வெளிநாட்டு சேவைக்கான விரிவாக்கத் திட்டத்தைத் தற்போது மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.


இதனையடுத்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் துவங்கவுள்ள இரண்டு புதிய விமான சேவை குறித்து தற்போது இண்டிகோ அறிவித்துள்ளது. 

கோவா முதல் அபு தாபி வரை..

Tap to resize

Latest Videos

இண்டிகோ வடக்கு கோவா மற்றும் அபு தாபி இடையே வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி முதல் விமானங்களை இயக்கவுள்ளது. இந்த புதிய வழித்தடம், உலகளாவிய இணைப்பை மேம்படுத்துவதையும், கோவா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான பயணத்திற்கான, அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ தகவலை இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

சிங்கப்பூர்.. இறந்த போலீஸ் அதிகாரி யுவராஜா.. இறப்பிற்கு முன் அவர் போட்ட பதிவு - மரணத்திற்கு இனபாகுபாடு காரணமா?

டெல்லி, மும்பை, சென்னை, கொச்சி மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து அபு தாபி செல்லும் இண்டிகோவின் சேவைகளுடன் சேர்த்து, கூடுதலாக இந்த வடக்கு கோவா மற்றும் அபு தாபி இடையே சேவை செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சேவையை வாரத்திற்கு மூன்று முறை இயக்க இண்டிகோ முடிவு செய்துள்ளது. 

ஹைதராபாத் முதல் சிங்கப்பூர் வரை..

மேலும் வருகின்ற அக்டோபர் 29ம் தேதி முதல், இண்டிகோ, தென்னிந்தியாவில் உள்ள ஹைதராபாத்தை சிங்கப்பூருடன் இணைக்கிறது. இந்த இரண்டு நகரங்களுக்கிடையேயான பயணத்திற்கான அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு இந்த விரிவாக்கமும் செயல்படுத்தப்படுவதாக மல்ஹோத்ரா கூறினார்.

அக்டோபர் 29ம் தேதி முதல் தினமும் ஹைதராபாத் - சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் - ஹைதராபாத் இடையே சேவைகள் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஜ்கர் மேளா மூலம் 70 ஆயிரம் பேருக்கு அரசு வேலை - இளைஞர்களை வாழ்த்திய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

click me!