உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைமை அறிவியல் வல்லுநர் பொறுப்பில் இருந்த இந்தியாவைச் சேர்ந்த, தமிழகத்தைச் சேர்ந்த செளமியா சுவாமிநாதன் ராஜினாமா செய்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைமை அறிவியல் வல்லுநர் பொறுப்பில் இருந்த இந்தியாவைச் சேர்ந்த, தமிழகத்தைச் சேர்ந்த செளமியா சுவாமிநாதன் ராஜினாமா செய்துள்ளார்.
செளமியா சுவாமிநாதன் இதை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
செளமியா சுவாமிநாதன் திடீர் ராஜினாமாவுக்கு காரணம் ஏதும் குறிப்பிடவில்லை, அது குறித்து எந்தத் தகவலும் இல்லை. உலக சுகாதார அமைப்பு போன்ற ஐ.நா.வின் மிகப்பெரிய அமைப்பிலிருந்து உயர் பதவியில் இருந்து ஒருவர் திடீரென விலகுவது இதுதான் முதல்முறையாகும்.
கொரோனாவுக்கு பின், அடுத்த கட்ட திட்டத்தை உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டு வரும்நிலையில் செளமியா சுவாமிநாதன் விலகியுள்ளார். செளமியா சுவாமிநாதன் விலகியது, உலக சுகாதார அமைப்பில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும்.
செளமியா சுவாமிநாதன் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ பருவங்கள் வருகின்றன, செல்கின்றன. ஒரு பார்வையிழந்த மனிதன், அவரின் மகன் சிலையைப் பார்க்கும்போதெல்லாம் நாம் ஏன்இங்கு இருக்கிறோம் என்பதை எனக்கு நினைவூட்டத் தவறுவதில்லை.
மக்களை ஆரோக்கியமாக மாற்றுவதற்கும் வழிகளைக் கண்டறிய வேண்டம். தேவைப்பட்டால், அவர்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டும். உலக சுகாதார அமைப்பில் பணிபுரியும் ஊழியர்களையும் நான் மதிக்கும் உயர்ந்த மனிதர்களையும் நான் இழக்கிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.
The seasons come and go - the statue of a man with river blindness & his son never fail to remind me why we are here . To find ways to make people healthier, and if necessary, to fight for their rights. I will miss the fantastic people who work here & whom I admire! pic.twitter.com/109Tcjaz30
— Soumya Swaminathan (@doctorsoumya)சமீபத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு செளமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில் “ உலகளவில் 5 ஆண்டுகள் பணியாற்றியதற்கு பின், அதிகமான ஆராய்ச்சிப் பணிகளிலும் கொள்கைரீதியான வேலையிலும் ஈடுபடத்தான் நான் ராஜினாமா செய்யப்போகிறேன். உலக சுகாதார அமைப்பில் நாங்கள் ஊக்குவித்த கருத்துக்கள், சிந்தனைகள் அனைத்தையும் நடைமுறைக்கு கொண்டுவர விரும்புகிறேன். நான் மிகச்சிறந்த, அற்புதமான நபர்களைச் சந்தித்துள்ளேன், அவர்களிடம் பல்வேறு யோசனைகளைத் தெரிவித்தேன், இந்தியாவுக்கு அதிகமான பங்களிப்புகளைச் செய்ய முடியும்.
மனிதர்கள் ஆரோக்கியத்தில் அதிக ஆர்வமும், முதலீடும் செய்ய சரியான நேரம். ஆரோக்கியத்தின் அவசியத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள இந்தியா, மற்றும் இந்தியா போன்ற நாடுகள் சிறந்த வாய்ப்புகள் உள்ளன. வலுவான மற்றும் எந்த சூழலையும் தாங்கக்கூடிய ஆரம்ப சுகாதார அமைப்புகளை உருவாக்குவதற்கும், சமூகங்களை மேம்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.
நான் எப்போதும் இந்தியாவில் வசிக்கவும் வேலை செய்யவும் விரும்பினேன், வெளிநாட்டில் எனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், அது எப்போதும் அது குறிப்பிட்ட காலம்தான்” எனத் தெரிவித்தார்
மருத்துவர் செளமியா சுவாமிநாதன் காசநோய் மற்றும் ஹெச்ஐ நோய் குறித்து செய்த ஆய்வுகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பில் சேர்வதற்கு முன், செளமியா, ஐசிஎம்ஆர் அமைப்பில் இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.