Trump 2024: நான் ரெடி! அமெரிக்க அதிபர் தேர்தலில் 3வது முறையாக போட்டியிடப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

By Pothy RajFirst Published Nov 16, 2022, 11:05 AM IST
Highlights

2024ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

2024ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க பெடரல் தேர்தல் ஆணையத்தில் தான் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டொனால்ட் ட்ரம்ப் தாக்கல் செய்தபின், இந்த அறிவிப்பை வெளிப்படையாக தெரிவித்தார்.

உலகின் பாதி சொத்துக்களை வைத்துள்ள அமெரி்க்க,சீன மக்கள்!இந்தியாவிடம் எவ்வளவு?ஸ்வாரஸ்ய அறிக்கை

குடியரசுக் கட்சி  மற்றும் ஆளும் ஜனநாயகக் கட்சி அதிபர் தேர்தல் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், அதற்குள் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக வருவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அளித்த பேட்டியில் “ அமெரிக்கா என்ற கோஷம் இப்போது இருந்து மீண்டும் திரும்ப ஒலிக்கும். அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்” என்று தெரிவித்தார்.

முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பர் ஏற்கெனவே கடந்த 2000ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து பிரச்சாரம் செய்து, பாதியிலேயே விலகினார். பின்னர் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். தற்போது 3வது முறையாக அதிபர் தேர்தலுக்கு 76வயதான ட்ரம்ப் தயாராகி வருகிறார்.

இன்னுமா லாக்டவுன்! சீன அரசின் முரட்டு விதிகளுக்கு எதிராக மக்கள் வன்முறை! வைரல் வீடியோ

சமீபத்தில் நடந்த தேர்தலில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்களும்,குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் தோல்வி அடைந்தனர். இதனால் கட்சிக்குள் ட்ரம்பின் ஆதராளர்கள் குறித்த கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. சரியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில், 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவதி்துள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையால் இருமுறை குற்றம்சாட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஒரே அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மட்டும்தான்.

டொனால்ட் ட்ரம்ப் நடத்திவரும் குடும்பத் தொழில், வர்த்தகத்தில் நடந்த வரிமோசடி குறித்து விசாரணை இன்னும் நடந்து வருகிறது, இதுதவிர நாடாளுமன்றத்தில் மக்கள் நடத்திய போராட்டத்தை தூண்டிவிட்டது குறித்த விசாரணையும் ட்ரம்ப் மீது நடக்கிறது.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க, பிரான்ஸ் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சு

இந்த சூழலில் 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய, துவேஷத்தை தூண்டிவிடும் கருத்துக்களால் இதுவரை பேஸ்புக், ட்விட்டரில் அவரின் கணக்குகள் மீதான தடை நீக்கப்படவில்லை. 

டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் துணை அதிபராக இருந்த மைக் பென்ஸ் சமீபத்தில் “ சோ ஹெல்ப் மி காட்” என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தார். அதில் 2021, ஜனவரி 6ம் தேதி ட்ரம்ப் செயல்கள் அனைத்தும் பொறுப்பற்றவை எனத் தெரிவித்துள்ளார்.

அதிபராக ட்ரம்ப் மீண்டும் வரவேண்டுமா என்ற கேள்விக்கு மைக் பென்ஸ் நூலில் அளித்த பதிலில் “ அது அமெரிக்க மக்களின் கைகளில் இருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, எதிர்காலத்துக்கு சிறந்த வாய்ப்புகள் பல உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

click me!