அமெரிக்க அதிபரை கொல்ல சதி செய்ததாக 19 வயது இந்திய இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்க அதிபரை கொல்ல சதி செய்த 19 வயது இந்திய இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் வெள்ளை மாளிகைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. சாய் வர்ஷித் என்ற இளைஞர் வெள்ளை மாளிகையைத் தாக்க முயன்றார்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அவர் ஒரு லாரியுடன் மிக வேகமாக வந்து வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள தடுப்புகளை தாக்கினார். மீண்டும் லாரியை எடுத்து இரண்டாவது முறை அடித்தார். அதன் பிறகு, ஸ்வஸ்திகா சின்னம் கொண்ட நாஜிக் கொடியை சாய் வர்ஷித் வெளியே எடுத்தார். மேலும், 'அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொன்ற பின், அதிகாரத்தை கையில் எடுப்பேன்' என, வர்ஷித் கூறியதாக கூறப்படுகிறது.
காரை ஓட்டிச் சென்றவர், மிசோரியில் உள்ள செஸ்டர்ஃபீல்டு பகுதியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா, அவருக்கு வயது 19, என அடையாளம் காணப்பட்டதாக, பார்க் காவல்துறை செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர் ஒரு டிரக்கை வாடகைக்கு எடுத்து நேராக வெள்ளை மாளிகைக்குள் செல்ல முயன்றார். இதனால் வெள்ளை மாளிகை அருகே பரபரப்பு ஏற்பட்டது. உடனே உஷாரான பாதுகாப்பு படையினர் சாய் வர்ஷித்தை கைது செய்தனர்.
இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?
போலீசார் நடத்திய விசாரணையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொல்ல சதி செய்ததாக சாய் வர்ஷித் ஒப்புக்கொண்டார். கடந்த ஆறு மாதங்களாக சதித்திட்டம் தீட்டியதாக சாய் வர்ஷித் ஒப்புக்கொண்டார். அதற்கு முன் சாய் வர்ஷித்துக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை. அவர் மீது வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் அமெரிக்க அதிபரை கொல்ல சதி செய்தல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. "ஆபத்தான ஆயுதம் மூலம் தாக்குதல், மோட்டார் வாகனத்தை பொறுப்பற்ற முறையில் இயக்குதல், ஜனாதிபதியை கொலை மிரட்டல்/ கடத்தல்/தீங்கு செய்தல், கூட்டாட்சி சொத்துகளை அழித்தல், அத்துமீறி நுழைதல்" ஆகியவை குற்றச்சாட்டுகளில் அடங்கும். சாய் வர்ஷித் தெலுங்கு இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..44 நிமிடத்தில் சார்ஜ்.! 5 வருடத்துக்கு அப்டேட்.! ஐபோனுக்கே டஃப் கொடுக்கும் Oppo F23 5G எப்படி இருக்கு?