மகனிடம் இரத்தத்தை வாங்கி இளமையாக இருக்கும் தந்தை! வருடத்திற்கு எவ்வளவு செலவு தெரியுமா?

By Kalai Selvi  |  First Published May 23, 2023, 9:31 PM IST

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் எப்போதும் இளமையாக இருப்பதற்காக தனது 17 வயது மகனிடம் இரத்தத்தை எடுத்து, இரத்த பிளாஸ்மா சிகிச்சை செய்து கொண்டார். 


அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பிரையன் ஜான்சன். இவரது வயது 45 ஆனால் இவர் பார்ப்பதற்கு 20 வயது இளைஞர் போல் இருப்பார். இந்த வயதில் அவரால் மட்டும் எப்படி இவ்வளவு இளமையாக இருக்க முடிகிறது என்று நம்மில் பலருக்கு தோன்றும் அது குறித்து விரிவாக இப்பதிவில் நாம் காணலாம்.

பிரையன் ஜான்சன் கடந்த ஏப்ரல் 3-ஆம் தனது தந்தை ரிச்சர்ட் (70 ), மகன் டால்மேஜ் (17) ஆகியோருடன் டல்லாஸுக்கு அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு தான் பிரையன் ஜான்சனுக்கு இரத்த பிளாஸ்மாவை மாற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கு அவரது மகன் டால்மேஜ் உடலில் இருந்து ஒரு லிட்டர் இரத்தம் எடுக்கப்பட்டது. பின் அந்த இரத்தத்தை  ஒரு இயந்திரத்தின் மூலம் திரவ பிளாஸ்மா, சிவப்பு மற்றும் வெள்ள இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்டுக்களை பிரித்து எடுத்தனர். அதுபோலவே அவரது தந்தை இடமிருந்தும் ரத்தத்தை எடுத்துள்ளனர். கூடுதலாக அவரது தந்தை மற்றும் மகனிடம் இருந்து எடுத்த பிளாஸ்மாவை பிரையன் ஜான்சனுக்கு செலுத்தினர்.

Latest Videos

undefined

யார் இந்த பிரையன் ஜான்சன்:

பிரையன் ஜான்சன் டெத்துறையில் முக்கிய தொழிலதிபராக வலம் வருகிறார். இந்த ரத்த பிளாஸ்மா சிகிச்சை அவருக்கு புதிதல்ல. இது போல் அவர் பல மாதங்களாக தன் உடலில் பிளாஸ்மாவை ஏற்று செலுத்தி உள்ளார். ஆனால் தனது சொந்த குடும்பத்தாரிடமிருந்து 
பிளாஸ்மாவை எடுத்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க: கம்பீரமாக.. தசைகளை வலுவாக்க விரும்புகிறீர்களா?

பொதுவாக பிரையன் ஜான்சன் இந்த சிகிச்சைக்காக பிளாஸ்மாவை தெரியாத நபர்களிடமிருந்து தான் பெற்றுக் பெற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர் யார் என்பதையும் தெரிந்து கொள்வார்.
இந்த சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒரே காரணம் அவர் எப்போதும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்காகவேயாம். இந்த சிகிச்சைக்காக இவர் வருடத்திற்கு 2 மில்லியன் செலவு செய்து வருகிறாராம்.

click me!