சிட்னியில் வீசிய மோடி அலை! கடலென திரண்ட மக்கள் முன்பு உணர்சிபொங்க பேசிய பிரதமர் மோடி!

By Dinesh TG  |  First Published May 23, 2023, 10:20 PM IST

சிட்னியில் இந்திய வம்சாவளியினர் தங்கள் பாரம்பரிய விழாக்களை கொண்டாடும் மையத்தில் பிரதமர் மோடி உணர்ச்சிபொங்க உரை நிகழ்த்தினார். இதில், சுமார் 20000 மக்கள் கூடி மோடி - மோடி என கோஷம் எழுப்பினர்.


பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா பயணத்துக்குப் பின்னர் நேற்று ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பை ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் அளித்து இருந்தனர்.

இன்று இந்திய வம்சாவழியினர் இடையே மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் இருவரும் சிட்னியில் பேசினர். சிட்னியில் குடோஸ் பாங்க் பகுதியில் நடந்த கூட்டத்தில் சுமார் 20,000 பேர் கூடி இருந்தனர். அப்போது ஆண்டனி அல்பானீஸ் பேசுகையில், ''இதற்கு முன்பு இந்த ஸ்டேஜில் புருஸ் ஸ்பிரிங்டீன் தோன்றி இருந்தார். அவருக்கு வராத கூட்டம் பிரதமர் மோடிக்கு கூடியுள்ளது. பிரதமர் மோடி தான் என்னுடைய பாஸ்.

ஒரு வருடத்திற்கு முன்பு நான் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இது எங்களது ஆறாவது சந்திப்பாக உள்ளது. இது ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளரும்.

 

आज दुनिया की सबसे बड़ी और सबसे युवा टैलेंट फैक्ट्री जिस देश में है, वो है- India 🇮🇳

कोरोना महामारी के दौर में जिस देश ने दुनिया का सबसे तेज वैक्सीनेशन प्रोग्राम चलाया, वो देश है- India : प्रधानमंत्री pic.twitter.com/2hyDrJrKpM

— MyGovIndia (@mygovindia)

Tap to resize

Latest Videos

 

ஏற்கனவே இந்தியா உலக அளவில் பிரபலமான நாடாக இருக்கிறது. மேலும் இது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு முக்கியமான அண்டை நாடு. இதனால் தான் முதலீடு செய்வதும் தேவை என்பதை உணர்ந்து இருக்கிறோம்.
 

click me!