சிங்கப்பூரில் தொடர்ச்சியாக பல குற்றங்கள்.. இந்திய வம்சாவளி வாலிபருக்கு 22 மாத சிறை - கூடுதலாக 12 பிரம்படி!

By Ansgar R  |  First Published Jul 11, 2023, 6:21 PM IST

சிங்கப்பூரில் சில மாதங்களுக்கு முன்பு இந்திய வம்சாவெளியை சேர்ந்த ஒருவர் தூக்கில் இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இன்றளவும் குற்றங்களின் அடிப்படையில் அதற்கு தண்டனையாக பிரம்படி துவங்கி, தூக்கு தண்டனை வரை வழங்கும் சட்டத்தை கொண்ட ஒரு நாடாக திகழ்கிறது சிங்கப்பூர். அந்நாட்டு அரசை பொருத்தவரை அது சிங்கப்பூரர்களாக இருந்தாலும் சரி, அல்லது பிற நாடுகளில் இருந்து அங்கு சென்று வசிப்பவர்களாக இருந்தாலும் சரி, தங்கள் சட்ட திட்டத்திற்கு உட்படாதபொழுது பாரபட்சமின்றி அவர்களை தண்டிக்கும் ஒரு கடுமையான அரசு தான் சிங்கப்பூர். 

இதற்கு முன்பாக சிங்கப்பூரில் சில மாதங்களுக்கு முன்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தூக்கில் இடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மகேஸ்வரன் என்கின்ற 29 வயது நபருக்கு தற்பொழுது சிங்கப்பூர் அரசு 22 மாத சிறை தண்டனையும், 12 பிரம்படியும் கொடுக்க உத்தரவிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மகேஸ்வரன் தண்டனை முடிந்து வெளியே வரும்பொழுது, அன்றிலிருந்து நான்கு மாத காலம் அவர் எந்த வகையான வாகனத்தையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் கூர்மையான ஆயுதம் ஒன்றை பாலசுப்பிரமணியன் என்பவரிடம் கொடுத்துள்ளார் மகேஸ்வரன். அதை கொண்டு அவர் வேறு ஒரு நபரை தாக்க, ரத்த வெள்ளத்தில் மிதந்தவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

புகுஷிமா முதல் பாம்புகள் தீவு வரை.. உலகின் மிகவும் ஆபத்தான இடங்கள் பற்றி தெரியுமா?

அதற்கு முன்பாக கடந்த 2019ம் ஆண்டு ஆபத்தை விளைவிக்க கூடிய ஆயுதங்களை வைத்திருந்த நிலையில் மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார், பிறகு அவர் பெயிலில் வெளியானார். லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு அவர் சென்று கொண்டிருக்கும்பொழுது, 33 வயது போலீஸ் அதிகாரி ஒருவரை குடிபோதையில் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார், இதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை சென்று திரும்பியுள்ளார் மகேஸ்வரன்.

அதே போல ஒருமுறை, சில நபர்களுடன் ஏற்பட்ட தகராறில் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு 7 பேரை அவர் துரத்தியதும், பின்னர் போலீசார் வந்து அவரை கைது செய்து சென்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. செப்டம்பர் 2021ல் உரிய லைசென்ஸ் இல்லாமல், சாலை விதிகளை மதிக்காமல் அவர் காரில் சென்ற புகாரும் தற்போது அவரது வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.    

சிங்கப்பூர் அரசின் விதிகளை மீறி அவர் பல குற்றங்களை தொடர்ச்சியாக செய்து வந்த நிலையில் தற்போது நீதிமன்றம் அவருக்கு 22 மாத சிறை தண்டனையும், 12 பிரம்படியும் கொடுத்து உத்தரவிட்டுள்ளது.

புடினின் Ghost Train : ஆடம்பர ரயிலின் மறைக்கப்பட்ட விவரங்கள் கசிந்தது.. இத்தனை வசதிகளா?

click me!