லண்டனில் புரோட்டீன் ஷேக் உட்கொண்டதால் உயிரிழந்த இந்திய வம்சாவளி சிறுவன்.. நீதி விசாரணையில் அதிர்ச்சி தகவல்.

Published : Jun 29, 2023, 08:21 AM ISTUpdated : Jun 29, 2023, 08:23 AM IST
லண்டனில் புரோட்டீன் ஷேக் உட்கொண்டதால் உயிரிழந்த இந்திய வம்சாவளி சிறுவன்.. நீதி விசாரணையில் அதிர்ச்சி தகவல்.

சுருக்கம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர், புரோட்டீன் ஷேக் சாப்பிட்டதால் மரணம் அடைந்த நிலையில், அவரின் மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, மேற்கு லண்டனில் உள்ள ஈலிங் மாவட்டத்தில், ரோஹன் கோதானியா என்ற 16 வயது சிறுவன, புரோட்டீன் ஷேக்கை உட்கொண்டதால் நோய்வாய்ப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.இந்த நிலையில் ரோஹனின் மரணம் குறித்த சமீபத்திய நீதி விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியகி உள்ளது. அதாவது, புரோட்டீன் ஷேக் குடித்ததால் அந்த சிறுவனுக்கு ஒரு அரிய மரபணு பாதிப்பு ஏற்பட்டதாகவும், அது மீள முடியாத மூளை பாதிப்புக்கு வழிவகுத்தது என்றும், இறுதியில் அவரது உயிரைப் பறித்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹன் மிகவும் ஒல்லியாக இருந்ததால் அவரின் உடலை கொஞ்சம் பருமனாக்க, அவரது தந்தை வாங்கிய புரோட்டீன் ஷேக்கை உட்கொண்டார். அதனை உட்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, ரோஹனின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அவர் அவசரமாக வெஸ்ட் மிடில்செக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் மீள முடியாத மூளை பாதிப்புக்கு ஆளானார். ரோஹனின் மரணத்திற்கு என்ன காரணம் என்று ஆரம்பத்தில் தெரியவில்லை. ஏனெனில் அவரது உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்டன.

 

சிங்கப்பூரை உலுக்கிய கொலை வழக்கு.. சிறையில் உள்ள இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை..

இந்த நிலையில், சமீபத்திய நீதித்துறை விசாரணை ரோஹனின் மரணத்திற்கான அடிப்படைக் காரணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது, இது ஆர்னிதின் டிரான்ஸ்கார்பமைலேஸ் (ornithine transcarbamylase - OTC) குறைபாடு எனப்படும் அரிய மரபணு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை, புரோட்டீன் மில்க் ஷேக்கின் அதிக புரத உள்ளடக்கத்தால் தூண்டப்பட்டு, ரோஹனின் இரத்த ஓட்டத்தில் அம்மோனியாவின் அதிகப்படியான முறிவுக்கு வழிவகுத்தது. மேலும் இது ஆபத்தான அளவை எட்டியது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உடல் உறுப்பு தானம் காரணமாக மரணத்திற்கான காரணம் OTC என பிரேத பரிசோதனையில் கண்டறிய முடியவில்லை. ஆனால் இந்த விவரம் முன்பு மில்டன் கெய்ன்ஸ் நீதிமன்ற விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்டது.

இந்த விசாரணையில், ரோஹனின் பெற்றோர்கள் சாட்சியமளித்தனர், ரோஹன் ஒரு பிரகாசமான, மென்மையான, நம்பகமான மற்றும் அதிக புத்திசாலி பையன் என்று விவரித்தனர். அவரின் தந்தை இதுகுறித்து பேசிய போது, "நான் அந்த மில்க் ஷேக்கை உடலை பருமனாக்க வாங்கினேன். அவர் மிகவும் ஒல்லியாக இருந்தார்.” என்று தெரிவித்தார்.

விசாரணையின் போது, புரோட்டீன் பானங்களின் பேக்கேஜிங்கில் எச்சரிக்கைகளைச் சேர்ப்பதன் அவசியம் குறித்து ஒழுங்குமுறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று விசாரணை அதிகாரி டாம் ஆஸ்போர்ன் தெரிவித்தார். OTC என்பது ஒரு அரிதான நிலை என்றாலும், குறைபாடுள்ள ஒருவர் அத்தகைய பானத்தை உட்கொண்டு, புரதச்சத்து அதிகரிப்பை அனுபவித்தால் அது தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

200 பில்லியன் டாலர்கள் திருட்டு.. கொரோனா காலகட்டத்தில் நடந்த ஊழல்: ஃபெடரல் கண்காணிப்புக் குழு தகவல்

PREV
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!