இந்திய வம்சாவளி சீக்கியரான அஜய் பால்சிங் பங்கா உலக வங்கியின் அடுத்த தலைவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உலக வங்கி வங்கியின் தலைவராக 2019ஆம் ஆண்டு பதவியேற்ற டேவிட் மால்பாஸின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு முடிவடைகிறது. ஆனால், அவர் முன்கூட்டியே பதவி விலகுவதாக அறிவித்துவிட்டார். இதனால் ஜூன் மாதம் அவரது பதவிக்காலம் முடிகிறது. இதனையடுத்து அந்தப் பதவிக்கு வேறு ஒருவரை நியமனம் செய்வது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார்.
சர்வதேச நிதி நிறுவனமான 'மாஸ்டர் கார்டு' நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அஜய் பால்சிங் பங்காவை ஜோ பைடன் பரிந்துரை செய்தார். உலக வங்கி தலைவர் பதவிக்கான விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. ஆனால், அஜய் பங்காவைத் தவிர வேறு யாரும் உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிட முன்வரவில்லை.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல முயன்ற உக்ரைன்.. அதிபருக்கு என்ன ஆச்சு? பரபரப்பு சம்பவம்!!
அஜய் பங்கா மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார் என்று உலக வங்கி கூறியுள்ளது. இதனால் உலக வங்கி தலைவர் பதவிக்கு அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் பதவியேற்கும் அஜய் பங்கா 5 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.
63 வயதான அஜய் பங்கா இந்தியாவில் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். 2010 மற்றும் 2021 வரை மாஸ்டர் கார்டை சிஇஓ பதவியில் இருந்தவர். அமெரிக்கன் செஞ்சிலுவைச் சங்கம், கிராஃப்ட் ஃபுட்ஸ் மற்றும் டவ் இன்க் ஆகியவற்றின் உயர் பதவிகளிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளார்.
தனது வேட்புமனுவை தாக்கல் செய்தபோது பேட்டி அளித்த அஜய் பங்கா, உலகளாவிய பிரச்சனைகளுக்கு நிதியுதவியை சமாளிக்க அதிக தனியார் துறை நிதியைப் திரட்ட விரும்புவதாகக் கூறினார். "தனியார் துறை பங்கேற்பு இல்லாமல் போதுமான நிதி திரட்ட இயலாது" என்ற அவர், உலக வங்கி தன் இலக்குகளை அடைய ஆபத்தை பகிர்ந்துகொள்ளக்கூடிய தனியார் நிதிகளை திரட்டும் அமைப்பை அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
செர்பியாவில் பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூடு.. 9 பேர் பலியான சோகம்..