
பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, இலங்கைக்கு உயிர் மூச்சை அளித்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கை நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே முறைப்படி அவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார். பின்னர் அரசின் கொள்கை அறிவிப்பை வாசித்தார். அப்போது, இந்த ஆண்டு இறுதி வரை எரிபொருள் விநியோகம் தற்போதுள்ள நடைமுறையின்படியே பின்பற்றப்படும். அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும். நீண்ட கால பொருளாதார கொள்கை திட்டத்தின்படி வரும் 2048ம் ஆண்டுக்குள் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும்.
இதையும் படிங்க: இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரின் சகோதரர்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை நீட்டிப்பு
ஜனாதிபதியின் பதவியை அரச குடும்பமாக கருதக்கூடாது. ஜனாதிபதியை அரசனாகவோ, கடவுளாகவோ கருதக்கூடாது. அதேநேரம் ஜனாதிபதிக்கு மன்னருக்கு நிகரான அதிகாரங்கள் உள்ளன. பழங்கால மன்னரை விட தற்போதைய ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்கள் உள்ளன. அதை உடனடியாக மாற்ற வேண்டும். ஜனாதிபதி பதவியில் இருப்பவர் நாட்டின் குடிமகன் மற்றும் மக்கள் பிரதிநிதி என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். விசேஷ கொடிகள் மற்றும் சின்னங்கள் மூலம் ஜனாதிபதியை முன்னிலைப்படுத்தக் கூடாது. அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறையை கொண்டுவரும் வகையில் 22 ஆவது திருத்தத்திற்கு (22ஏ) நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அந்த உரையில் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கூகுல் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு சிக்கல்... ஷாக் நியூஸ் கொடுத்த சுந்தர் பிச்சை!!
அவரது உரைக்கு பின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, இலங்கைக்கு உயிர் மூச்சை அளித்துள்ளது. எங்களது மக்கள் சார்பாகவும், எனது தனிப்பட்ட முறையிலும், பிரதமர் மோடி, இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதார மீட்பு திட்டங்களுக்கான எனது முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும் வேண்டும் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.