sri lanka crisis:இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரின் சகோதரர்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை நீட்டிப்பு

Published : Aug 03, 2022, 05:26 PM IST
sri lanka crisis:இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரின் சகோதரர்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை நீட்டிப்பு

சுருக்கம்

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரின் இளைய சகோதரரும் முன்னாள் நிதிஅமைச்சருமான பசில் ராஜபக்ச ஆகியோர் ஆகஸ்ட் 11ம் தேதிவரை நாட்டைவிட்டு வெளியேறத் தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரின் இளைய சகோதரரும் முன்னாள் நிதிஅமைச்சருமான பசில் ராஜபக்ச ஆகியோர் ஆகஸ்ட் 11ம் தேதிவரை நாட்டைவிட்டு வெளியேறத் தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரச் சீரழிவுக்குக் காரணமானவர்கள் குறித்துவிசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்யப்பட்டது.

நான்சி பெலூசி வருகை! 24 மணிநேரத்தில் தைவானுக்கு 'செக்' வைத்த சீனா

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச இருவரும் 4ம்தேதி(நாளை) வரை நாட்டை விட்டு வெளியேறக் கூடாது எனத் உத்தரவிட்டது.

 சிலோன் வர்த்தகக்கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சந்திரா ஜெயரத்னே, இலங்கை முன்னாள் நீச்சல் சாம்பியன் ஜூலியன் போலிங், ஜீஹன் கனகரத்னே, இலங்கை வெளிப்படை அமைப்பு ஆகியோர் சேர்ந்து இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில், நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவுக்கு பசில் ராஜபக்ச, மகிந்தா ராபக்ச, ரிசர்வ் வங்கி கவர்னர் அஜித் நிவார்ட் கேப்ரல் ஆகியோர்தான் காரணம்.இவர்கள்தான் நேரடிப் பொறுப்பு. இலங்கையில் உணவு, எரிபொருள், மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு, விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்ததற்கும் இவர்கள்தான் காரணம் என்று தங்கள் மனுவில் தெரிவித்திருந்தார்கள்.

china:taiwan:pelosi: ‘இந்த பூச்சாண்டிதனத்துக்கெல்லாம் நாங்க பயப்படமாட்டோம்’: சீனாவுக்கு தைவான் அதிபர் பதிலடி

இந்த மனுவை விசாரி்த்த உச்ச நீதிமன்றம், ஜூலை 28ம் தேதிவரை ராஜபக்ச சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடைவிதித்தது, பின்னர் தடையை ஆகஸ்ட் 2ம் தேதிவரை நீட்டித்தது.

இதற்கிடையே இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தபோது நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூரில் தங்கியுள்ளார்.

taiwan: pelosi: china: சீனா எதிர்த்தாலும் தைவானைக் கைவிடமாட்டோம்: நெருப்பில் எண்ணெய் வார்த்த நான்சி பெலோசி

முதல்கட்டமாக 14 நாட்கள் விசா நீட்டிப்புசெய்த சிங்கப்பூர் அரசு, மேலும் 14நாட்கள் அதாவது ஆகஸ்ட் 11ம் தேதிவரை விசாவை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு