#UnmaskingChina: இந்தியா-சீனாவை கைகழுவிய ரஷ்யா..!நேருக்கு நேர் பேசி மூக்கை உடைத்த வெளியுறவுத்துறை அமைச்சர்..!!

By Ezhilarasan Babu  |  First Published Jun 23, 2020, 6:49 PM IST

இந்தியா-சீனா  இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க மூன்றாவது நாட்டின் உதவி தேவை இல்லை என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கருத்து தெரிவித்துள்ளார். 


இந்தியா-சீனா  இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க மூன்றாவது நாட்டின் உதவி தேவை இல்லை என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி  லாவ்ரோவ் கருத்து தெரிவித்துள்ளார். கிழக்கு  லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா-சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி எல்லையில் சீனா ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tap to resize

Latest Videos

இதற்கிடையில் ஜூன்-15  இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் சீனர்களுடன் போராடி இத்தனை எண்ணிக்கையில் இந்திய ராணுவவீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம்  தெரிவித்துள்ளது. தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது, இந்நிலையில் இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வருவதால் இருநாட்டு எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா, இந்தியா, சீனா வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு ரஷ்யா ஏற்பாடு செய்திருந்தது. அதில் இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்கள் வீடியோ கான்பிரன்சிங் மூலம் கலந்து கொண்டனர். மூன்றாவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அதில் கலந்து கொண்டார்.  

இந்தியா-சீனா இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டு இருநாட்டுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், அதை தணிக்கும் முயற்சியாக ரஷ்யா இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.இது மூன்று நாடுகளுக்கும் இடையே நம்பிக்கை வளர்ப்பதற்கு வாய்ப்பாக அமையும் எனவும் ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க மூன்றாவது நாடு தேவையில்லை. எனவும் தங்களுக்கு இடையேயான பிரச்சனையை தீர்த்துக் கொள்வதில் வெளிநாடுகளின் உதவி  இருநாடுகளுக்கும் தேவை என்று நான் நினைக்கவில்லை, குறிப்பாக அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படும்போது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை,  ஏனென்றால் அவர்களால் அந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்று செர்ஜி லாவ்ரோவ், கூறியுள்ளார். 

மேலும் புது தில்லி மற்றும் பெய்ஜிங் ஆகியவை அமைதி தீர்மானத்திற்கு தங்கள் அர்ப்பணிப்பை காட்டியுள்ளன. அவர்களுக்கு இடையே பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டங்களை தொடங்கியுள்ளனர் என அவர் கூறியுள்ளார். முன்னதாக இந்தியா முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள தயக்கம் காட்டியது, ஆனால் ரஷ்யா வலியுறுத்தியதன் அடிப்படையில் அது ஒப்புக்கொண்டது. இந்த முத்தரப்பு கூட்டத்தில் இந்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில்,  அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் மற்றும் நீடித்த உலக ஒழுங்கை உருவாக்க உதவ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அப்போது சீனாவோ அல்லது மற்ற நாடுகளின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. தொடர்ந்து பேசிய அவர், உலகின் முன்னணி குரல்கள் ஒவ்வொரு வகையிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 
 

click me!