இனிதே முடிந்த சிங்கப்பூர் பயணம் - இரு முக்கிய மந்திரிகளை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

By Ansgar R  |  First Published Oct 22, 2023, 4:31 PM IST

Singapore : ரசு ரீதியான பயணமாக கடந்த வாரம் வியட்நாம் நாட்டிற்கு சென்றிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், கடந்த மூன்று நாட்களாக சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.  இந்த சந்திப்பின்போது பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.


கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு முக்கிய அமைச்சர்களை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து பல விஷயங்களை விவாதித்தார். இந்நிலையில் அவருடைய மூன்றாம் நாள் பயணமான நேற்று சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சரான விவியன் பாலகிருஷ்ணன் அவர்களை சந்தித்தார். 

இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சிகள் குறித்தும் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல தமிழக வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் கே. சண்முகம் அவர்களையும் நேற்று சந்தித்து பல்வேறு விஷயங்களை உரையாடினார் அமைச்சர் ஜெய்சங்கர்.

Tap to resize

Latest Videos

பப்புவா நியூ கினி கடற்கரை.. அடித்துவரப்பட்ட வினோத மிருகம்? உண்மையில் அது கடல்கன்னியா? குழப்பத்தில் நிபுணர்கள்!

இந்திய அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த சிங்கப்பூர் பயணத்தின்போது இந்தியாவும், சிங்கப்பூரும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. கடந்த செப்டம்பர் 17, 2022 முதல் நிறுவப்பட்ட இந்தியா-சிங்கப்பூர் மந்திரி வட்டமேசைக்கு இணங்க டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் உள்ள ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Happy to catch up with Minister of Home Affairs & Law K Shanmugam today.

Exchanged views on further strengthening of our bilateral relations. Also on regional and global developments. pic.twitter.com/LEpPIL4qCc

— Dr. S. Jaishankar (@DrSJaishankar)

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

ஜெய்சங்கரின் இந்த வருகை, சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான "நெருக்கமான மற்றும் நீண்டகால உறவுகளை" மீண்டும் உறுதிப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது என்று சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகளும் தங்களின் இருதரப்பு ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்து, பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளன. 

சாலைகள், விமான நிலையம், ஹெலிபேட்... எல்லையில் சீனாவின் அசுர வளர்ச்சி... எச்சரிக்கும் பென்டகன் ரிப்போர்ட்

click me!