"உக்ரைன் போர், ஹமாஸ்-இஸ்ரேல் போர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் நாட்டில் இதுபோன்ற பிரச்சினைகளில் போர்கள் நடந்ததே இல்லை" என்கிறார் மோகன் பகவத்.
இந்து மதம் அனைத்து பிரிவினரையும் மதிக்கிறது என்றும் இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு வழிவகுத்ததைப் போன்ற பிரச்சினைகளால் இந்தியா ஒருபோதும் மோதல்களைக் கண்டதில்லை என்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350வது ஆண்டு விழாவையொட்டி, பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோகன் பகவத் பங்கேற்றுப் பேசினார்.
"இந்த நாட்டில் அனைத்து மதங்களையும், மதங்களையும் மதிக்கும் ஒரு மதம், கலாச்சாரம் உள்ளது. அதுதான் இந்து மதம்" என்று மோகன் பகவத் தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும், "இது இந்துக்களின் நாடு. ஆனால், இந்துக்களின் நாடு என்பதற்காக மற்ற அனைத்து மதங்களையும் நிராகரிக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. இங்கு முஸ்லீம்களும் பாதுகாக்கப்படுகிறார்கள். இந்துக்கள் மட்டுமே இதைச் செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். இந்தியா மட்டுமே இதைச் செய்கிறது என்று சொல்லவேண்டும். மற்றவர்கள் இதைச் செய்யவில்லை" என மோகன் பகவத் கூறினார்.
"எல்லா இடங்களிலும், சண்டைகள் நடக்கின்றன. உக்ரைன் போர், ஹமாஸ்-இஸ்ரேல் போர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் நாட்டில் இதுபோன்ற பிரச்சினைகளில் போர்கள் நடந்ததே இல்லை." என்றார்.
தொடர்து பேசிய அவர் "சிவாஜி மகாராஜ் காலத்தில் அந்நியப் படையெடுப்பு நடந்தபோது அப்படி இருந்தது. ஆனால் நாம் ஒருபோதும் போரிடவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளில் இந்தியர் யாருடனும் சண்டையிட்டது இல்லை. அதனால்தான் நாம் இந்துக்களாக இருக்கிறோம்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் குறிப்பிட்டார்.
சிறுமியை பலாத்காரம் செய்த மகனுக்கு 20 வருட சிறை தண்டனை பெற்றுத் தந்த தாய்!