சிங்கப்பூர் அரசு கடுமையான பல சட்டதிட்டங்களை கொண்ட ஒரு அரசு என்பது பலருக்கும் தெரியும், ஆனால் அப்படிப்பட்ட நாட்டிலேயே, போலியான பெயரை பயன்படுத்தி, வேறு இரு நபர்களுக்கு செல்லவேண்டிய இன்சூரன்ஸ் பணத்தை பறிக்க முயன்ற ஒரு இந்தியர் தற்போது அங்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து தலைமறைவாகிச் சென்ற ஒரு வழக்கறிஞரின் பெயரை பயன்படுத்தி, சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இரண்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து அவர்களை ஏமாற்றி சுமார் 77 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபகரிக்க நினைத்த 48 வயதான இந்தியர் ஒருவர் தற்பொழுது சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சகா ரஞ்சித் சந்திரா என்ற அந்த 48 வயது நபர் சிங்கப்பூரில் ஏற்கனவே வசித்து வந்து, அங்கிருந்து தப்பி சென்ற ஒரு வழக்கறிஞரின் பெயரை பயன்படுத்தி, இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கு சேர வேண்டிய தீர்வு தொகை அதாவது இதனை Injury Claim என்று அழைப்பார்கள், அந்த தொகையை பெற இரு இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஏமாற்ற முயற்சித்துள்ளார்.
மனைவியின் பல்லை அகற்ற Vacuum cleaner-ஐ பயன்படுத்திய கணவர்.. காரணம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..
அதன் மூலம் அவருக்கு சுமார் 77 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் கிடைக்கவிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பில் இது சுமார் 47 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சந்திரா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில், சிங்கப்பூரில் உள்ள இரண்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களை வழக்கறிஞர் சார்லஸ் யோ யாவ் என்ற பெயரில் சந்திரா தொடர்பு கொண்டு பேசியதாக தெரிய வருகிறது. அந்த இரு நிறுவனங்களிடம் சிங்கப்பூரில் உள்ள பிரபல White Field Law கார்ப்பரேஷன் நிறுவனத்தை சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட நபருடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இரு வெளிநாட்டு பணியாளர்களுக்கு சேர வேண்டிய Injury Claimகளை பெற இந்த நடவடிக்கைகள் நடத்தி வருவதாகவும் சந்திரா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அவர்களுடைய நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்த இரு நிறுவனங்கள், சிங்கப்பூரின் ACRA என்று அழைக்கப்படும் பைனான்ஸ் மற்றும் கார்ப்பரேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையத்தில் சந்திரா குறித்த (அதாவது அவர் பொய்யாக கூறிய சார்லஸ் யோ யாவ் குறித்த) தரவுகளை தேடும்பொழுது அதில் தரவுகள் ஏதும் இல்லாத நிலையில் சந்தேகம் அடைந்த அந்த நிறுவனங்கள் உரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
அதனை அடுத்து ரஞ்சித் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் மற்றும் RS குளோபல் இமிகிரேஷன் கன்சல்டன்சி உள்ளிட்ட பல நிறுவனங்களின் இயக்குனராக பணியாற்றி வந்த சந்திரா மீது சந்தேகம் ஏற்பட்டு, தற்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு தற்போது அடுத்த கட்ட விசாரணை நடந்து வருகிறது.