சிறுவர்களின் ஆபாசப் படம் எடுத்து அனுப்ப பணம் கொடுத்த பிரிட்டன் ஆசிரியருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை!

By SG Balan  |  First Published Aug 10, 2023, 11:31 AM IST

இந்தியாவில்  சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ அனுப்பச் சொல்லி இளைஞர்களுக்கு ரூ. 69 லட்சம் பணம் வழங்கிய பிரிட்டடைச் சேர்ந்த மேத்யூ ஸ்மித் என்பவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.


இந்தியாவில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து அதன் படங்களையும் வீடியோக்களையும் அனுப்புவதற்காக இந்தியாவில் உள்ள இரண்டு இளைஞர்களுக்கு 66,000 பவுண்டு (சுமார் ரூ. 69 லட்சம்) பணம் வழங்கிய குற்றச்சாட்டில் பிரிட்டடைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் மேத்யூ ஸ்மித்துக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ அனுப்புவதற்கு ஈடாக அவர்களின் பள்ளிக் கட்டணத்தையும் செலுத்துவதாக ஸ்மித் கூறியுள்ளார். லண்டனின் கிழக்கு டல்விச் பகுதியைச் சேர்ந்த ஸ்மித் (35), 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்வதை ஊக்குவித்தல், 13 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் செயல்களில் ஈடுபடச் செய்தல், சிறுவர்களின் ஆபாச படங்களை தயாரித்து விநியோகித்தது, ஒரு நாயுடன் உடலுறவை சித்தரிக்கும் படத்தை வைத்திருப்பது உள்ளிட்ட 22 குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். இவற்றை அவர் ஒப்புக்கொண்டு சரண் அடைந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைப்பு... விரைவில் அடுத்த பொதுத்தேர்தல் நடப்பதும் கேள்விக்குறி!

ஸ்மித்திடம் பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாம், மொபைல் போன்றவற்றில் இருந்து 120,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆபாச படங்கள் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஸ்மித் இந்தியாவில் உள்ள இளைஞர்களை டெலிகிராமில் தொடர்புகொண்டு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து படமெடுத்து அனுப்பும்படி கோரியுள்ளார் என்றும் அந்த இளைஞர்களை தன் வலையில் சிக்க வைக்க தன்னிடம் உள்ள ஆபாசப் படங்களையும் வீடியோக்களையும் அனுப்பி இருக்கிறார் என்றும் போலீசார் கூறுகின்றனர்.

டிசம்பர் 2016 முதல் நவம்பர் 2022 வரை இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி ஸ்மித் லண்டனில் கைது செய்யப்பட்டார். ஸ்மித் 2007 முதல் 2014 வரை இந்தியா முழுவதும் உள்ள அனாதை இல்லங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார். 24 வயதில் அவர் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளார். பின் நேபாளத்திற்குச் சென்று மூன்று ஆண்டுகள் அங்கு வாழ்ந்துள்ளார். பின்னர் லண்டன் திரும்பியதும் ஜூலை 2022 வரை ஒரு பள்ளியில் பணியாற்றியுள்ளார்.

பொய் தகவல் கொடுத்தவர்களுக்கு இனி போராத காலம் தான்! வேட்டு வைக்கும் வருமான வரித்துறை!

ஸ்மித் காத்மாண்டுவில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, தனது 10 வயது சகோதரனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதற்காக, இந்தியாவில் ஒரு இளைஞருக்கு 7,000 பவுண்டு (ரூ. 7.4 லட்சம்) கொடுத்திருக்கிறார். இந்தியாவில் உள்ள மற்றொரு இளைஞருக்கு 59,000 பவுண்டு (ரூ. 62 லட்சம்) கொடுத்துள்ளார். இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர் ஏழு அல்லது எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்நிலையில் லண்டன் நீதிமன்றம் ஸ்மித்துக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீதிபதி மார்ட்டின் கிரிஃபித், ஸ்மித்தை ஆபத்தானவர் என்று கருதுவதாகக் கூறினாலும், அவர் குற்றங்களை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளதால் அவரது தண்டனையை குறைத்துள்ளார்.

வாட்ஸ்அப் ஸ்க்ரீன் ஷேரிங் வசதி வந்தாச்சு! 2 மாத காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த அப்டேட்!

click me!