பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையை ஏற்று அந்நாட்டு புதன்கிழமை இரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என அந்நாட்டு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையை ஏற்று அந்நாட்டு புதன்கிழமை இரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என அந்நாட்டு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக்காலம் ஆகஸ்டு 12ஆம் தேதி முடிவடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இந்த நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைக்கப்பட்டது. அந்தப் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 90 நாட்களில் பொதுத் தேர்தல் நடத்தப்படும். காபந்து அரசு பொறுப்பேற்க உள்ளது.
எவ்வாறாயினும், தேர்தல் ஆணையம் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான தொகுதிகளை மறுவரையறை செய்யத் தொடங்குவதால், தேர்தல் நடத்துவதற்கு 90 நாட்களுக்கு மேலேயே ஆகலாம் என்று கூறப்படுகிறது. பல மாதங்கள் தாமதம் ஆகும் என்பதால் அதுவரை காபந்து அரசு நீடிக்கும் என்று கருதப்படுகிறது.
சிங்கப்பூரில் பெர்சீட்ஸ் எரிகல் பொழிவு! இந்த அரிய வானியல் நிகழ்வை மிஸ் பண்ணாம பாருங்க!
தேர்தலை தாமதப்படுத்துவது பொதுமக்களின் கோபத்தைத் தூண்டி, நாட்டில் நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஜூலை 2018 பொதுத் தேர்தலில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற்றது. அவர் முதல் முறையாக பிரதமராக பதவியேற்றார். 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் இம்ரான் கான் கடந்த ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது. இது பாகிஸ்தான் அரசின் ஸ்திரத்தன்மை குறித்த கவலையை எழுப்பியது. அதன் பின்னர் அவர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் ஐந்து ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1947ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து பாகிஸ்தான் ஆட்சியில் தாக்கம் செலுத்திவரும் சக்திவாய்ந்த ராணுவமே தன்னை வெளியேற்றியதற்குக் காரணம் என்று இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், ராணுவம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
வாட்ஸ்அப் ஸ்க்ரீன் ஷேரிங் வசதி வந்தாச்சு! 2 மாத காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த அப்டேட்!
சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இருந்து நிதியுதவியைப் பெறுவதற்காக பாகிஸ்தான் பல பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியதால், பொருளாதார நெருக்கடி மற்றும் வரலாறு காணாத பணவீக்கத்துடன் போராடி வருகிறது.
பாகிஸ்தான் சட்டப்படி ஆட்சிக்காலம் முழுமையாக முடிந்து தேர்தல் நடத்தப்பட்டால், தேர்தல் நடந்த 60 நாட்கள் காலக்கெடுவுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், முன்கூட்டியே ஆட்சி கலைக்கப்பட்டால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். இதனால், ஆட்சிக்காலத்தை நீட்டிக்கவே ஷெபாஷ் ஷெரீப் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
பொய் தகவல் கொடுத்தவர்களுக்கு இனி போராத காலம் தான்! வேட்டு வைக்கும் வருமான வரித்துறை!