#UnmaskingChina: படைகளை குவித்தால் நிலைமை மோசமாகும்...!! சீனாவுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த இந்தியா..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 27, 2020, 9:23 PM IST
Highlights

எந்தவகையிலும் சர்ச்சை இல்லாத பகுதிகளில் சீன படைகளின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மேலும் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் எல்லை பதற்றத்திற்கு சீனாவே பொறுப்பு என அவர் குற்றஞ்சாட்டினார்.

எல்லையில் ராணுவத்தை அதிகரிக்க முயற்சித்தால் இரு நாட்டுக்கும் இடையிலான சமாதான முன்னெடுப்புகள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் இருதரப்பு உறவுகளும் கேள்விக்குறியாகும் என இந்தியா, சீனாவை எச்சரித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருவதால், இந்தியா இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கிழக்கு லடாக்கில் சீனா தனது நடவடிக்கைகளை நிறுத்துமாறும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி கடந்த வெள்ளிக்கிழமை செய்தி நிறுவனமான பிடிஐக்கு பேட்டி கொடுத்தார், அப்போது பேசிய அவர் :- இந்தியாவுடன் எவ்வாறு உறவு கொள்ளவேண்டும் என்பதை சீனா தீர்மானிக்க வேண்டும், அதைவிட்டு எல்லையில் ராணுவத்தை அதிகரிக்க முயற்சித்தால் இரு நாட்டுக்கும் இடையே சமாதான முன்னெடுப்புகள் பாதிக்கப்படும். 

இருதரப்பு உறவுகளும் கேள்விக்குறியாகும், எல்லையில் சீன வீரர்களின் செயல்பாடுகளால் பதற்றம் அதிகரிக்கிறது என அவர் கூறினார். மேலும் இந்தியா உடனான உறவை பற்றி சீனா கவனமாக இருக்க வேண்டும். அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்வது சீனாவின் பொறுப்பு எனக்கூறிய அவர், எந்தவித சர்ச்சையும் இல்லாத பகுதிகளில் கூட சீன ராணுவம் தீவிரம் காட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்திய வீரர்களின் சாதாரண ரோந்து பணிகளை கூட சீனா கட்டுப்படுத்தக் கூடாது என்ற அவர், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் தங்களுக்கு இறையாண்மை உள்ளது என சீனா தெரிவித்த கருத்தை முற்றிலுமாக நிராகரித்தார். மேலும் இதுபோன்ற பொய்களால் சீனா ஒருபோதும் பயன் அடைய முடியாது என்றார்.  எல்லையில் எங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் எங்கள் எல்லை பகுதிக்குள் உள்ளன, எனவே நிலைமையை உணர்ந்து அத்தியாவசியமற்ற செயல்களை சீனா தடுத்து நிறுத்த வேண்டும். 

எந்தவகையிலும் சர்ச்சை இல்லாத பகுதிகளில் சீன படைகளின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மேலும் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் எல்லை பதற்றத்திற்கு சீனாவே பொறுப்பு என அவர் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் எல்லை பதற்றத்தை குறைப்பது இந்தியாவின் பொறுப்பு என்று இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீட்டோங் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்த இந்திய தூதர் மிஸ்ரி, தற்போது எல்லையில்  ஏற்பட்ட நிலைமைகளுக்கு சீனா தான் முழு காரணம் என்பது தெளிவான விஷயம் என்றார். மேலும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்திருந்ததன் காரணமாக எங்கள் வீரர்களின் சாதாரண ரோந்து  பணிகளுக்கு கூட சிக்கல் ஏற்பட்டது,  மேலும் சீனாவின் நடவடிக்கைகள் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியது எனவும் மிஸ்ரி கூறினார். 

 

click me!