#UnmaskingChina:சீனாவுக்கு எதிராக குவாமியில் அமெரிக்கா தலைமையில் போர் பயிற்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 27, 2020, 5:57 PM IST
Highlights

இந்நிலையில் வியாழக்கிழமை ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் டாரோ கோனோ டோக்கியோவில் செய்தியாளரிடம் கூறுகையில், சீனா மற்றும் வட கொரியாவில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் தரையில் மட்டுமல்ல, சைபர் ஸ்பேஸிலும் உள்ளது என்றார். 

சீனாவில் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் அதை எதிர்க்கவும் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளுக்கு ஆசிய பசிபிக் பகுதியில் விமான போர்  பயிற்சி அளிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு லடாக் பகுதியில் இந்திய-சீன எல்லையில்  இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள்  கொல்லப்பட்டுள்ள நிலையில் சீனாவுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள அமெரிக்கா தற்போது இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ஏற்கனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையே தென்சீனக் கடல் மற்றும் தைவான் ஹாங்காங் விவகாரத்தில் மோதல் இருந்து வரும் நிலையில் இந்தியா- சீனாவுக்குமிடையேயான பதற்றம் சீனாவை எதிரிக்க அமெரிக்காவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. 

இந்நிலையில் தேசிய பாதுகாப்பு அதிகார சட்டம் அமெரிக்க செனட்டில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பசுபிக் பிராந்தியத்தில் உள்ள குவாமியில் அமெரிக்கா விமனப் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, ஐரோப்பாவிலுள்ள துருப்புக்களை அமெரிக்கா குறைத்து வருவதாகவும், இதனால் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற நாடுகளை சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் ஆஸ்பர் மற்றும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் என்ஜி-இங்-ஹெய்ன் ஆகியோர்  குவாமில் சிங்கப்பூருக்கு போர் ஜெட் பயிற்சி பிரிவை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் ஜப்பான், இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் சீனாவின் ராணுவ வலிமை மற்றும் ஆசியாவில் அதன் நோக்கங்கள் குறித்து ஒரு கண் வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளதுஎன்றும்அவர்கூறியுள்ளார். 

இந்நிலையில் வியாழக்கிழமை ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் டாரோ கோனோ டோக்கியோவில் செய்தியாளரிடம் கூறுகையில், சீனா மற்றும் வட கொரியாவில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் தரையில் மட்டுமல்ல, சைபர் ஸ்பேஸிலும் உள்ளது என்றார். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அண்மையில் தென்சீனக்கடல், ஹாங்காங் மற்றும் இந்தியாவுடன் சீனா என்ன செய்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆசிய பசிபிக் பகுதியில் சீனாவின் ராணுவ சக்திக்கும், அதனால் மிரட்டப்படும் நாடுகளின் ராணுவ சக்திக்கும் உள்ள வித்தியாசத்தை குறைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. எனவே இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆசிய பசிபிக் பகுதியில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளன. எனவே இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் கூட்டு போர் பயிற்சி எடுக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!