மும்பை தாக்குதல் மற்றும் பதான்கோட் விமானப் படைத்தளத்தின் மீதான தாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் மீது விரைவாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
மும்பை மற்றும் பதான்கோட் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது பாகிஸ்தான் உடனடியாக மற்றும் தொடர்ச்சியான, மீள முடியாத நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதல் இஸ்லாமாபாத்தில் இருந்தவாறு மும்பை தாக்குதல் உள்ளிட்ட பிற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளின் மீது விரைவாக சட்ட நடவடிக்கை எடுக்கவும் இந்தியா, அமெரிக்க ஆகிய இருநாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
இந்திய அமெரிக்க பயங்கரவாத கூட்டு நடவடிக்கை குழுவின் 17வது கூட்டம், காணொலி காட்சி வாயிலாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதில் இந்திய-அமெரிக்க பதவி உரையாடல் மூன்றாவது அமர்வில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் பயங்கரவாத எதிர்ப்பு இணைச்செயலாளர் மகாவீர் சிங்வியும், அதேபோல் அமெரிக்க வெளியுறவுத் துறையின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளருமான நாதன் சேல் ஆகியோர் உரையாடினார். அக்கூட்டத்திற்கு பின்னர் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மறைமுகமாக உபயோகிப்பது குற்றம் எனவும், எனவே பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உடனடியாக, நீடித்த மற்றும் மீளமுடியாத நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இருதரப்பினரும் அடிக்கோடிட்டு கட்டினர்.
மும்பை தாக்குதல் மற்றும் பதான்கோட் விமானப் படைத்தளத்தின் மீதான தாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் மீது விரைவாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். அதேபோல் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களுக்கும் அதன் அரசாங்கத்திற்கும் அமெரிக்கத் தரப்பு ஆதரவு அளிக்கும் எனவும், அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் இரு தரப்பும் இணைந்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் எந்த வடிவத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் அரங்கேறினாலும் அதை இந்தோ-அமெரிக்கா பயங்கரவாத கூட்டு நடவடிக்கை குழு கடுமையாக எதிர்க்கிறது. ஐநா மன்றத்தால் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள அல்கொய்தா ஐ.எஸ்.ஐ.எஸ் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அறிவிப்பதை தடுப்பது, பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை தடுப்பது, அடிப்படைவாதத்தை எதிர்கொள்வது, இணையதளத்தை பயங்கரவாதிகள் பயன்படுத்துவது தடுப்பது, பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய நடமாட்டம், பயங்கரவாதிகள் மீது வழக்கு பதிவு செய்தல் உள்ளிட்ட சவால்களை சந்திப்பதற்கான முயற்சிகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.