இந்தியாவில் இதுவரை இல்லாத பேரதிர்ச்சி..!! கொரோனா தொற்றில் அமெரிக்காவை அடித்து தூக்கப் போகும் ஆபத்து..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 12, 2020, 10:44 AM IST
Highlights

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 97, 570  பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்தை கடந்துள்ளது. 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 97, 570  பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்தை கடந்துள்ளது. 

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 180 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த தொற்று நோயால் உலக அளவில் சுமார் 2.81 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 9.9 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2.58  கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பெரு உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரசால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 66 லட்சத்து 36 ஆயிரத்து க்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 19 லட்சத்து 7 ஆயிரத்து 421 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது,  இதுவரை இந்தியாவில் 46 லட்சத்து 59 ஆயிரத்து அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 77 ஆயிரத்து 506 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் மற்ற எல்லா நாடுகளையும் விட இந்தியாவிலேயே வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 36 லட்சத்து 24 ஆயிரத்து 196 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 75 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 97 ஆயிரத்து 570 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது இந்தியாவில் இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கை ஆகும், இதனால் ஒட்டுமொத்த நாட்டிலும் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 81,533 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரமும் கணிசமாக சரிந்துள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல, இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.5 சதவீதம் குறைந்துள்ளதாக, மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை மற்றும் புதிய மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தியாவில் 4 சதவீதம் சரிவு ஏற்படும் என நிறுவனம் கணித்திருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பில் கொரோனாவின்  தாக்கம் அதிகமாக உள்ளதால் நாட்டின் நிதி வலிமை மேலும் குறையக்கூடும் என மூடிஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

 

click me!