3 லட்சம் இளைஞர்களுக்கு ஜப்பான் செல்லும் வாய்ப்பு! மத்திய அரசு புதிய திட்டம் அறிவிப்பு...

First Published Oct 12, 2017, 3:40 PM IST
Highlights
India To Send 3 Lakh Youth To Japan For On Job Training


3 முதல் 5 ஆண்டுகள் தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 3 லட்சம் இளைஞர்கள் ஜப்பான் நாட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தெரிவித்தார். 

மத்திய திறன்மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது- 

3 முதல் 5 ஆண்டுகள் வரை தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக இந்திய இளைஞர்கள் 3 லட்சம் பேர் ஜப்பானுக்கு அனுப்பப்பட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சிச் செலவை ஜப்பான் அரசே ஏற்றுக்கொள்ளும். 

இது தொடர்பாக ஜப்பான் மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. வரும் 16-ந்தேதி ஜப்பானுக்கு 3 நாள் பயணம் செல்கிறேன், அப்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும். 

தொழில்திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் 3 லட்சம் இளைஞர்களை ஜப்பானுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு ஜப்பானிலும், பயிற்சி முடித்தபின் இந்தியாவிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஜப்பானில் பயிற்சி எடுக்கும் இளைஞர்களுக்கு தங்குமிட வசதி, வேலைவாய்ப்பு வசதிகளும் அந்த நாட்டு அரசு மூலம் செய்து தரப்படும். எங்களின் கணிப்பில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேருக்கு ஜப்பானிலேயே கூட வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. 

இந்த திட்டத்தில் இளைஞர்கள் தேர்வு என்பது மிகவும் வெளிப்படையாக நடக்கும். ஜப்பானில் பயிற்சி முடித்து இந்தியா வரும் இளைஞர்கள் நம் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில்துறைக்கும் பங்களிப்பு ெசய்வார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!