கரீபியனுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பிய இந்தியா.. கடவுளுக்கு நிகராக மோடியை கும்பிடும் டோமினிக்கா பிரதமர்.

Published : Feb 10, 2021, 06:38 PM IST
கரீபியனுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பிய இந்தியா.. கடவுளுக்கு நிகராக மோடியை கும்பிடும் டோமினிக்கா பிரதமர்.

சுருக்கம்

இந்திய நாட்டின் பிரதமர் இவ்வளவு விரைவாக எங்களது பிரார்த்தனைக்கு பதிலளிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை,  இந்திய பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், 

இந்தியா அனுப்பிய கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட டொமினிக்கா நாட்டின் பிரதமர்,  எங்களது பிரார்த்தனைக்கு இந்திய பிரதமர் மோடி எவ்வளவு விரைவாக பதிலளிப்பார் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை, எங்களது நாட்டு மக்களின் சார்பில் இந்திய பிரதமருக்கும் இந்திய மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என டொமினிகா பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்  கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியா ஒன்றுக்கு இரண்டாக கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை உருவாக்கி அதை தனது நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்குவது மட்டுமின்றி பல்வேறு ஏழை எளிய நடுத்தர நாடுகளுக்கும் நட்பின் அடிப்படையில் கொடையாக வழங்கிவருகிறது. சிரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா தயாரித்த தடுப்பூசிகளை இந்தியா, பூட்டான், மாலத்தீவு, நேபாளம், மியன்மார், பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடான கரீபியன், பார்படாஸ் மற்றும் டொமினிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. 

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இன்று டொமினிக்காவில் தரையிறங்கிய நிலையில், அந்நாட்டு அதிகாரிகள் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர். அதையடுத்து அந்நாட்டின் பிரதமர் ரூஸ்வெல்ட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரின் பேச்சு உணர்ச்சி பூர்வமாக இருந்தது, செய்தியாளரை சந்தித்து போது அவர் கூறியதாவது:  இந்தியாவிலிருந்து  அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் டொமினிக்கா வந்து சேர்ந்தது, இந்திய நாட்டின் பிரதமர் இவ்வளவு விரைவாக எங்களது பிரார்த்தனைக்கு பதிலளிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை,  இந்திய பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,  பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை மக்களின் சமத்துவத்தை அங்கிகரிப்பதற்கானது என்பதை நாங்கள் உணர்கிறோம். 

வெரும்,  72000 மக்கள்தொகை கொண்ட ஒரு சிறிய கரீபியன் தீவின் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் மோடி எங்களுக்கு தடுப்புசி அனுப்பி வைத்திருக்கிறார். எங்களது கோரிக்கைக்கு இவ்வளவு சீக்கிரம் பதில் கிடைக்கும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை, இது போன்ற ஒரு உலகளாவிய தொற்றுநோய் ஒரு நாட்டின் எவ்வளவு அசாதாரணமானது என்பதை பிரதமர் மோடி உணர்ந்து கொண்டதின் அடிப்படையில் இதை செய்திருக்கிறார். அவர் எங்களுக்கு தடுப்பூசி அனுப்பி வைத்திருப்பதன் மூலம் அவர் எங்களது மக்களை அங்கீகரித்து இருக்கிறார் என உணர்கிறோம். பிரதமர் மோடி மற்றும் அவரது அரசு மற்றும் இந்திய குடிமக்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வோம். 

 

மீண்டும் இதுபோன்ற வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் என அவர் மனமுருகி பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நல்லெண்ண அடிப்படையில் டோமினிக்காவுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளார்.  

 

PREV
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!