இந்தியாவில் லட்டக்கணக்கில் மக்கள் பாதிக்க வாய்ப்பு..!! வைராஸ் தாக்குதல் உச்சக்கட்டத்தை நெருங்கும் ஆபத்து..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 26, 2020, 11:54 AM IST
Highlights

இந்தியாவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் பல லட்சங்களை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது . 

அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிதீவிரமாக இருக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது .  அதேபோல் வரும் மே மாதத்திற்குள் கொரோனாவின் தாக்கம் உச்சகட்டத்தை அடையும் எனவும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் .   சீனாவில் தோன்றிய கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது . சர்வதேச அளவில் சுமார் நான்கு லட்சம் பேர் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் .  இந்த வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது . இந்நிலையில்  இந்தியாவில் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அடுத்த 21 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது .  அந்தந்த மாநில அரசுகளும் மத்திய அரசு அறிவித்த தேசிய ஊரடங்கை உறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600 கடந்துள்ளது . நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் நடமாடிக் கொண்டு இருப்பதால் நிலைமை சிக்கலாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .  இந்நிலையில் இந்திய மற்றும் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொண்ட கோவிட்-இண்ட் -19 என்ற ஆய்வுகு குழு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .  மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஓரளவுக்கு சிறப்பானதாக இருக்கிறது ஆனாலும்கூட மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பரிசோதனை செய்யப்படும் மக்கள் எண்ணிக்கை மிகக் குறைவு எனவே வைரஸ்  தாக்கம் இருப்பது தெரியாமலேயே  பலர் உலாவிக் கொண்டிருக்கின்றனர் என அந்த குழு எச்சரித்துள்ளது.

 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது , இந்நிலையில் முறையான கண்காணிப்பும்,  போதிய பரிசோதனை முறைகளும் இல்லாத காரணத்தினால் ,  இந்தியாவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் பல லட்சங்களை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது .  வரும்  மே மாதத்திற்குள் கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்  என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளன .  அதேபோல் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் போது தேவையான படுக்கைகள்  மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அதிக உயிர்ச் சேதம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் இந்த பாதிப்பை பாதியாக குறைக்க முடியுமென தெரிவிக்கின்றனர்.

 

click me!