கொரோனாவில் இருந்து விரைவில் அமெரிக்கா மீளும்..!! இந்த வைரஸ் மாதக் கணக்கில் இருக்காது, அறிவியல் ஆய்வாளர் தகவல்.

By Ezhilarasan Babu  |  First Published Mar 26, 2020, 11:19 AM IST


கொரோனா வைரஸ் பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் இருந்து பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கூற்று முற்றிலும் தவறானது என மறுத்துள்ளார் . தீவிரமான விளைவுகள் ஏற்படும் என்பதை தம் தரவுகள் ஆதரிக்கவில்லை என தெரிவித்துள்ளார் .


கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து எதிர்பார்த்ததைவிட அமெரிக்கா மிக வேகமாக மீளும் என ஸ்டான்போர்டு பல்கலைக்கழக  உயிர் இயற்பியலாளரும்  நோபல் பரிசு பெற்ற பேராசிரியருமான மைக்கேல் லெவிட் கருத்து தெரிவித்துள்ளார் , கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது .  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளது சுமார் நான்கு லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இந்நிலையில் அமெரிக்கா நோய் பாதிப்பில் இத்தாலி சீனாவுக்கு அடுத்து நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நோய் பாதிப்பு மற்றும் அதன் தீவிரம் குறித்து நோபல் பரிசு பெற்றவரும்  ஸ்டான்போர்டு பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும் மான மைக்கேல் லெவிட் தன்னுடைய கணிப்புகளை கூறி வருகிறார், 

Latest Videos

முன்னதாக சீனா குறித்து கூறியது அவர் துல்லியமான அனுமானத்தை வெளியிட்டிருந்தார் ,  அதாவது சீனாவில் சுமார் 80,000 பேர் இந்த வைரஸால் பாதிப்பர் என்றும் சுமார் 3 ஆயிரத்து 250 பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் முன் கூட்டியே கணித்திருந்தார் . முன்பே அவர் கூறியபடி  சீனாவில் 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டனர் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். லெவிட்  அனுமானித்தபடி புள்ளி விவரங்கள் ஒத்துப்போயின.  இந்நிலையில் அவர் பல்வேறு நாடுகளில் வைரசால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அனுமானித்து வருகிறார்.  இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், கொரோனா குறித்து  சர்வதேச சுகாதார வல்லுனர்கள் கணிப்பதை  விட விரைவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அமெரிக்கா விடுபடும் என்றார்,  

கொரோனா வைரஸ் பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் இருந்து பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கூற்று முற்றிலும் தவறானது என மறுத்துள்ளார் . தீவிரமான விளைவுகள் ஏற்படும் என்பதை தம் தரவுகள் ஆதரிக்கவில்லை என தெரிவித்துள்ளார் .  மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியையும் ஊடகங்கள் தொடர்ந்து எழுப்புகிறது,   இதுகுறித்து தொடர்ந்து செய்தி வெளியிடுவதால் பீதி ஏற்பட்டுள்ளது.  அதேபோல் சீனா இத்தாலி அல்லது ஈரானில் நடந்ததை விட அமெரிக்காவில் நல்ல விளைவுகள் ஏற்பட போகிறது எனக் கூறினார் .  குறிப்பாக சமூக விலகல் சமூக இடைவெளி நடவடிக்கைகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கியமான தீர்வு என அவர் தெரிவித்துள்ளார்.

 

click me!