ஆப்கனிஸ்தானை விட்டு வேகவேகமாக வெளியேறும் இந்தியா.. வெளியுறவுத்துறைக்கு மோடி இட்ட கட்டளை.. பரபரப்பு.

By Ezhilarasan Babu  |  First Published Aug 24, 2021, 8:22 AM IST

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதை அடுத்து ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. மீதமுள்ள அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட்டு 31ஆம் தேதிக்குள் வெளியேறும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. 


ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், அங்கு அவர்கள் ஆட்சியை நிறுவ முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் அங்குள்ள தூதரகங்களை மூடிவிட்டு அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு வெளியேற்றி வருகிறது. இந்நிலையில் ஆப்கனிஸ்தான் விவகாரம் தொடர்பாக அனைத்துக்  கட்சிகளுக்கும் விளக்கமளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து  அனைத்து கட்சிகளுக்கும் விளக்குமாறு வெளியுறவு துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதை அடுத்து ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. மீதமுள்ள அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட்டு 31ஆம் தேதிக்குள் வெளியேறும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு, அங்கு ஆட்சியை நிறுவ தலிபான்கள் திட்டமிட்டுள்ளனர். தலிபான்களின் ஆட்சியில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால், சொந்த நாட்டு மக்களே ஆப்கனைவிட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில்  ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக ஏர் இந்தியா மற்றும் விமானப்படை விமானங்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை தாயகம் அழைத்து வந்துள்ளது.

இந்நிலையில் ஆப்கனிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. ஆப்கனிஸ்தான் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் விளக்கமளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆப்கனிஸ்தான் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள, அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கான மத்திய அமைச்சர் ஜோஷி இது தொடர்பான கூடுதல் விவரங்களை விரைவில் வெளியிடுவார் என பதிவிட்டுள்ளார்.
 

click me!