டிஜிட்டல் நிதி திறன் பயன்பாட்டில் உலக நாடுளுக்கு இந்தியா சிறந்த வழிகாட்டியாக உள்ளது: பில்கேட்ஸ் புகழாரம்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2020, 1:08 PM IST
Highlights

இந்தியாவில் அதிக அடர்த்தி கொண்ட நகரங்கள் உள்ளன. மக்கள் குறுகலான சிறிய வீடுகளிலேயே வசிக்கின்றனர். இந்த நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் நோய்த்தொற்றை தடுப்பது மிகவும் சவாலானது என தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பம் கொரோனா நெருக்கடி காலத்தில் மிகப்பெரிய அளவில் கை கொடுத்துள்ளது என உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியா தனது டிஜிட்டல் நிதி திறனை பயன்படுத்தி அது தடையற்ற பண பரிமாற்றத்தை மேற்கொண்டது எனவும், குறிப்பாக பெண்களுக்கு சுய உதவி குழுக்களின் மூலம் நிதி சென்றடைய டிஜிட்டல் நிதி திறன் பயன்படுத்தப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார். டிஜிட்டல் நிதி திறன் மூலம் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது எனவும், பில்கேட்ஸ் இந்தியாவே வெகுவாக பாராட்டியுள்ளார். 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அந்த வைரஸை தடுப்பதற்கான முயற்சிகள்  மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ள உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தொடர்ந்து ஏழை எளிய நாடுகளுக்கு தனது அறக்கட்டளை மூலம் நிதி உதவி செய்து வருகிறார். அதேபோல் தடுப்பூசி ஆராய்ச்சியிலும் பில்கேட்ஸ் பெரும்பங்கு வகித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சி, உலகப் பொருளாதார சரிவு என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆங்கில நாளேடு  பில்கேட்சை நேர்காணல் செய்துள்ளது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: 

உலகம் முழுவதும் குரோனா வைரஸ் பரவியுள்ளது. இது உலகளாவிய நிர்வாக தோல்வி என்று நீங்கள் நினைக்கிறீர்களா.?  என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் வைத்துள்ள அவர்,  தற்போது உலகம் முழுக்க வைரஸ் பரவி உள்ளது அதன்  பாதிப்புகளை நாம் பின்னோக்கி ஆராய முடியும், அதே நேரத்தில் எந்தெந்த நாடுகள் விரைவாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. கொரோனா வைரஸை தடம் அறிதலில் தீவிரம் காட்டின என்பதை எல்லாம் நாம் ஆராய முடியும்.  முகக் கவசம் அணிவது, வைரஸ் தொடர்பு தடமறிதல் போன்ற நடவடிக்கைகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு நிறைய மாறுபடுகிறது. குறிப்பாக merce அல்லது sarce போன்ற நோய்களை எதிர் கொண்ட நாடுகளுக்கு சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் மிக எளிதாக செய்ய முடிந்தது எனக் கூறினார். 

பொதுவாக கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் வறுமை அதிகரித்துள்ளது,  உலக அளவில் சுகாதாரத்துறையில் பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.  குறிப்பாக ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் எச்ஐவி, மலேரியா  பாதிப்புக்கு மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விளைவுகள் காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. நாம் சில புத்திசாலித்தனமான வேலைகளைச் செய்தால், 2022ம் ஆண்டிற்குள் தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும். விரைவாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டால், அது சாத்தியமாகும். விரைவில் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் பட்சத்தில் சுகாதார அமைப்புகள் மீண்டெழ முடியும். அதேநேரத்தில் உலக அளவில் பொருளாதார பின்னடைவுகளும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. மீண்டும் உலக நாடுகள் பழைய நிலைமையை அடைய 5 முதல் 10 ஆண்டுகள் ஆகக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19க்கு எதிராக இந்தியாவின் முயற்சிகள் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன.? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பில்கேட்ஸ், இந்தியாவில் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு குறித்து கருத்து கூறும் அளவிற்கு நான் நிபுணர் அல்ல. இந்தியாவில் அதிக அடர்த்தி கொண்ட நகரங்கள் உள்ளன. மக்கள் குறுகலான சிறிய வீடுகளிலேயே வசிக்கின்றனர். இந்த நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் நோய்த்தொற்றை தடுப்பது மிகவும் சவாலானது என தெரிவித்துள்ளார். உலகம் ஒரு தடுப்பூசியை எப்போது எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர். தடுப்பூசி ஆராய்ச்சி என்பது உலகளாவிய முயற்சியாக இருக்க வேண்டும், உலக அளவில் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு தடுப்பூசியை சோதனை செய்ய பல நாடுகளின் உதவிகள் தேவை, விரைவில் ஒரு தடுப்பூசியை நாம் பெறப் போகிறோம். இதேபோன்று மற்ற நிறுவனங்களாலும் தடுப்பூசிகளை தயாரிக்கக்கூடும். தடுப்பூசி ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.  ஏனெனில் உலகில் மிகப்பெரிய தடுப்பூசியை உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. சீரம் பாரத் பயோடெக், பயோ-இ போன்ற இந்திய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்ந்து உரையாடி வருகிறோம். 

அதிக அளவில் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் பட்சத்தில் அவைகள் குறைந்த விலையில் மற்ற ஏழை நாடுகளுக்கும் கிடைக்க உதவியாக இருக்கும். அஸ்ட்ராஜெனேகா, நோவா வாக்ஸ், சனோஃபி மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட ஆராய்ச்சியில் உள்ளன அவைகள் வெற்றி பெற்றால் அதற்கான உற்பத்தித் திறனை அதிகரிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆறு தடுப்பூசிகளில் மூன்று வெற்றிகரமானதாக அமையும். அதேபோல் ஐரோப்பா அல்லது இங்கிலாந்து நாடுகளில் தயாரிக்கப்பட்டு வரும் உயர்மட்ட கட்டுப்பாட்டாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஒரு தடுப்பூசியை உலகில் பெரும்பாலானவர்கள் விரும்பக்கூடும் என்று நினைக்கிறேன். மேற்கத்திய நாடுகளின் கூட்டாண்மை மூலம் குறிப்பாக இந்தியாவுடன் அதிக அளவில் தடுப்பூசிகளை பெற முடியுமென்றால், ஏழ்மையான நாடுகளுக்கு கூட அவற்றை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.தொற்று நோயில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் யாவை என பில்கேட்ஸ்சிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், கொரோனாவுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, நோய்த்தடுப்பு திட்டமிடலை அரசாங்கங்கள் தயாரிக்க தவறிவிட்டன. தொற்று நோய்களுக்கு எதிராக தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி உருவாக்கப்பட்டிருந்தாலும் அவைகள் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டன. 

covid-19 எதிர்கொள்ள இந்தியா என்ன செய்ய முடியும்.? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பில்கேட்ஸ், இந்தியாவில் பல தசாப்தங்களாக ஆரம்ப சுகாதார பாதுகாப்பு மேம்பட்டு வருகிறது. புதிய தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இந்தியாவில் குழந்தைகளின் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பழைய நிலைமைக்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நோய் டிஜிட்டல் புரட்சியை துரிதப்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்தியா டிஜிட்டல் மயத்தை ஊக்கப்படுத்தி இருந்ததால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. ஷாப்பிங் என்பது ஆன்லைனில் நடைபெறுகிறது, கல்வியும் ஆன்லைனில் நடக்கிறது, மற்ற நாடுகளுக்கு இந்தியா நிச்சயமாக சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. அதே போல் இந்தியா தனது டிஜிட்டல் நிதி திறனை மிக சிறப்பாக பயன்படுத்த முடிந்துள்ளது. ஆதார் மற்றும் ஒட்டுமொத்த NPCI கட்டண முறையும் நன்றாக வேலை செய்கின்றன. டிஜிட்டல் நிதி திறனை கொண்டு இந்த கொரோனா காலகட்டத்தில் சுய உதவி குழுக்களின் மூலம் பெண்களுக்கு பணம் வினியோகிக்கப் பட்டுள்ளது. அதிக அளவில் பெண்கள் கொரோனா நெருக்கடியை காலத்திலும் சுமுகமாக செயல்பட முடிந்துள்ளது. ஆனால் இதை மற்ற நாடுகள் மிகவும் பொறாமையுடன் பார்க்கின்றன. இந்தவகை முறையை மேலும் சிறப்பாக பயன்படுத்த இந்தியாவுக்கு நாங்கள் உதவுவோம் என அவர் கூறியுள்ளார்.
 

click me!