பிரதமர் மோடி, சோனியாவை கண்காணிக்கும் சீனா: 10 ஆயிரம் இந்தியர்களை உளவு பார்ப்பதாகவும் அதிர்ச்சி. பட்டியல் உள்ளே

By Ezhilarasan BabuFirst Published Sep 14, 2020, 5:32 PM IST
Highlights

சுமார் இரண்டு மாத கால ஆய்வுக்குப் பின்னர், ஆங்கில நாளேடு இந்த தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லையில் மோதல் நீடித்து வரும் நிலையில், அதைத் தணிப்பதற்கான முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனா, இந்தியாவை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் விவிஐபி மற்றும் விஐபிக்களை கண்காணித்து வருவதாகவும், அதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மாநில முதலமைச்சர்கள் வரை அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் இரண்டு மாத கால ஆய்வுக்குப் பின்னர், ஆங்கில நாளேடு இந்த தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 3 மாதத்துக்கு மேலாக இந்திய சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது, ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மறுபுறம் பதற்றத்தைத் தணிப்பதற்காக முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஆங்கில நாளேடு ஒன்று ஆதாரத்துடன் செய்தியொன்று வெளியிட்டுள்ளது. ஆதாவது ஏற்கனவே அமெரிக்கா, சீனா தங்களது நாட்டை உளவுபார்த்ததாக பகிரங்க குற்றச்சாட்டு  வைத்துள்ள நிலையில்,   இந்தியாவும் அதேபோன்றதொரு குற்றச்சாட்டை தற்போது முன்வைத்துள்ளது. அதாவது சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு பெரிய தரவுகள் திரட்டும் நிறுவனம் ஒன்று சுமார் 10 ஆயிரம்  இந்தியர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாகவும், அந்த ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. 

சுமார் இரண்டு மாத கால ஆய்வுக்குப் பின்னர் இந்த தகவலை அந்நாளேடு தெரிவித்துள்ளது. சீனாவின் ஷென்சென்  நகரைச் சேர்ந்த ஜின் ஹூவா  என்ற தரவு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இந்திய விவிஐபி மற்றும் விஐபிக்களை, அரசியல் முக்கியத்துவம் பெற்றவர்களை, மக்களால் மிகவும் பிரபலமாக நேசிக்கப்படுவோரை,  24 மணி நேரமும் கண்காணித்து, அவர்கள் குறித்த தகவல்களையும் அவர்களுடைய செயல்பாடுகளையும் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்களின் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய தகவல்களையும் திரட்டுவதை அந்நிறுவனம் நோக்கமாக கொண்டு இயங்கிவருவதாக கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தலா 200- 200  என சீனா தனது கண்காணிப்பில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இடதுசாரி கட்சிகளை சேர்ந்த 60 பேர் அவர்களது கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிகிறது. முக்கிய கட்சிகளின் ஆளும் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் அதில் உள்ளனர். மொத்தத்தில் 1,350 அரசியல்வாதிகளும் 350 எம்பிக்களும் கண்காணிப்பில் உள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி,  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் ராம்நாத்  கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் நீதித்துறை, வணிகம், விளையாட்டு, ஊடகங்கள்,  கலாச்சாரம் மற்றும் நிவாரணம் என அனைத்துத் துறை சார்ந்த முக்கிய நபர்களையும் சீனா கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் கண்காணிக்கப் படுவதாகவும், அந்த ஆங்கில செய்தித்தாள் தெரிவித்துள்ளது. முக்கியமாக  சீனாவின் கண்காணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பாதுகாப்பு தலைமைத் தளபதி பிபின் ராவத், இந்தியாவின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பப்டே, ஆடிட்டர் ஜெனரல் ஜி.சி.முர்மு, (சிஏஜி), அமிதாப் பச்சன், காந்த், (என்ஐடிஐ ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி)  ரத்தன் டாடா, தலைவர் (எமரிட்டஸ்), டாடா குழுமம், கவுதம் 
அதானி (அதானி குழுமத்தின் தலைவர்) சச்சின் டெண்டுல்கர், (கிரிக்கெட் வீரர்) ஷியாம் பெனகல் (திரைப்பட இயக்குநர்) 

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி, வி.கே.சிங், கிரண் ரிஜிஜு, ரமேஷ் போக்ரியால்,  நிஷாங்க், என 8 மத்திய அமைச்சர்களும், மாநில முதல்வர்  சிவ்ராஜ் சிங் சவுகான் (மத்திய பிரதேசம்) அசோக் கெஹ்லோட், முதலமைச்சர்( ராஜஸ்தான்)  உத்தவ் தாக்கரே, முதல்வர், (மகாராஷ்டிரா)  அமரீந்தர் சிங், முதல்வர், (பஞ்சாப்)  மம்தா பானர்ஜி, முதல்வர், (மேற்கு வங்கம்) என 5 மாநில முதலமைச்சர்கள். மற்றும்  7 முன்னாள் முதலமைச்சர்கள்,  ராமன் சிங் (சத்தீஸ்கர்)  அசோக் சவான் (மகாராஷ்டிரா) சித்தராமையா(கர்நாடக) ஹரிஷ் ராவத் (உத்தரகண்ட்) லாலு பிரசாத் யாதவ்( பீகார்) பூபிந்தர் சிங் ஹூடா(ஹரியானா) 
பாபுலால் மராண்டி(ஜார்க்கண்ட்) என 7 மாநில முன்னாள் முதலமைச்சர்களும்,  மற்றும் அரசியல் 

தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களான சவிதா கோவிந்த், (ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மனைவி) குர்ஷரன் கவுர் (முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி) ஜூபின் இரானி, (மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கணவர்) சுக்பீர் சிங் சாங், (மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுரின் கணவர்) மற்றும் டிம்டு (அகிலேஷ் யாதவின் மனைவி) ஆகியோர் சீனாவின் கண்காணிப்பில் உள்ளதாக கூறப்படு கிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சசி தரூர் சீன அரசும் அதன் இராணுவமும் 10 ஆயிரம் இந்தியர்களை கண்காணித்து வருவது சாதாரண விஷயம் அல்ல இது மிக ஒரு ஆழமான நடவடிக்கை அதன் நோக்கம் என்ன தரவுகளை வைத்து சீனா என்ன செய்ய திட்டமிடுகிறது என்பது குறித்து நாம் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்


 

click me!